தைரிய சிக்ஸர்!
நா.முத்துக்குமார் எழுதும் ‘நினைவோ ஒரு பறவை’க்காக ஆவலில் மனம் சிறகடிக்கிறது! சீக்கிரமாக கூண்டைத் திறந்து விடுங்கள் சார்! - என்.கஜேந்திரன், நிரவி.
‘ஆகாயம் கனவு அப்துல் கலாம்’ புதிய தொடர் தீபாவளி போனஸாக (சர்ப்ரைஸ் தொடர்) அமைந்தது. தொடக்கமே விறுவிறுவென்று சீறிப் பாய்ந்தது. பாராட்டுகள்! - பாபு கிருஷ்ணராஜ், கோவை.
‘காக்கா முட்டை’யில் அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷின் துணிச்சல் யாருக்கு வரும்? ‘புறம் பேசுபவர்களைப் பிடிக்காது’ என அவர் சொல்லியிருப்பதும் அதே மாதிரியான சிக்ஸர்தான்! - ‘மீசை’ எஸ்.மூர்த்தி, மஞ்சக்குப்பம்.
புலியோடு வாக்கிங் போகும் சர்க்கஸ் உரிமையாளரைப் பார்த்து பிரமித்தேன். ‘இது வாக்கிங் போகும் புலி...’ என அதற்கு டி.ஆர் பாணி டைட்டில் வைத்தது செம குசும்பு! - எஸ்.சங்கீதா, புதுச்சேரி.
மாற்றுத் திறனாளியாக கிரிக்கெட்டில் சாதனை புரியும் ‘சச்சின்’ சிவா, நிச்சயம் சச்சின் போலவே புகழ் பெறுவார். அவருக்கான வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்! - ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து ஸ்ருதி விலகிவிட்டாரா... அந்தப் படத்தில் அவரைப் பார்க்க முடியாது என்றாலும் இந்தச் செய்தியால் ஒரு அசத்தலான ஸ்டில்லை பார்க்க முடிந்ததே... சந்தோஷம்! - எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
அறிவுப் பாடத்தைப் புகட்டும் கல்விக்கூடங்களை அழிவுப் பாதைக்கு மாற்றிச் செல்லும் அரசின் அலட்சியப் போக்குக்கு தங்கள் கட்டுரை நல்ல சவுக்கடி. - வி.வினிஷா, சிவகாசி.
‘நயன்தாரா விஷயம் என் பர்சனல்’ என்று விக்னேஷ் சிவன் ஒப்புதல் அளித்த பிறகு இனி சந்தேகக் கிசுகிசுக்கள் ஏதுமே தேவை யிருக்காது! - என்.திவ்யப்பிரியா, சிதம்பரம்.
பூசி மெழுகாமல் உள்ளது உள்ளபடி ‘நச்’ என்று உரைத்துள்ளார் நாஞ்சில் நாடன். முதலாளிகளுக்காக மக்களின் குடி கெடுக்கும் அரசுக்கு அது உறைக்க வேண்டுமே! - கே.எஸ்.குமார், விழுப்புரம்.
தல ‘வரலாறு’டன் தயாராகும் புதுமையான சட்டை வித்தியாசமான முயற்சி! - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் மூலம், ஐ.நா.வின் சார்பு நிலை புரிந்துவிட்டது. அமெரிக்கா ஒன்றும் சைவப் பூனை இல்லை என்பதை இந்தியா எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறதோ? - எம்.எஸ்.இப்ராகிம், சென்னை-91.
டென்ஷன் பாரதிராஜா, பயந்த பாக்கியராஜ், குழம்பிய டெக்னீஷியன்களை... சமாளித்த மனோபாலாவின் சமயோசித அறிவே, அவரை இயக்குநர், நடிகர், தயாரிப்பாளராக உயர்த்தியுள்ளது! - மனோகர், சென்னை -18.
|