என்னை லேடி சூப்பர் ஸ்டார்னு சொல்றாங்க!



ரகுல் ப்ரீத் சிங்

டோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் ‘தடையற தாக்க’, ‘என்னமோ ஏதோ’ என ஏற்கனவே அறிமுகமான ரகுல், தெலுங்கில் ராசியான பொண்ணு. இப்போது ராம்சரணுடன் நடிக்கும் ‘புரூஸ்லீ தி ஃபைட்டர்’ படத்தின் இசை வெளியீட்டிற்காக சென்னை வந்திருந்த ரகுலின் பேச்சு ரசகுல்லா டேஸ்ட்!

பிறந்தது, வளர்ந்தது:
இந்தியாவின் தலைநகரில்!

பூர்வீகம்: பஞ்சாபி

உயரம்: 5’8”

வீட்ல ரகுல் எப்படி?:
எங்க அப்பா மிலிட்டரி மேன். ரொம்ப ஸ்ட்ரிக்ட். சண்டே கூட காலையில 8 மணிக்கே எழுந்தாகணும்!

பொழுதுபோக்கு:
நான் கோல்ஃப் சாம்பியன்... பேட்மின்டன், டென்னிஸ் எல்லாம் கூட அத்துப்படி! கோல்ஃப்ல நேஷனல் லெவல்ல நிறைய விளையாடியிருக்கேன்

இப்போ நீங்கதான் டோலிவுட்ல நம்பர் ஒன்னா?:
‘‘நம்பர் ஒன்.. நம்பர் டூவில் எல்லாம் நம்பிக்கை இல்லை. பட், மீடியாக்கள் என்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’னு சொல்றாங்க!

நடிக்க வருவதற்கு முன்: ரேம்ப் வாக்... ஃபேஷன் ஷோ, விளம்பரங்கள்னு மாடலிங்ல ஜாலியா இருந்தேன்

பிடிச்ச ஹீரோயின்கள்: கஜோல், தேவி

நடிக்க வருவதற்கு முன்: ரேம்ப் வாக்... ஃபேஷன் ஷோ, விளம்பரங்கள்னு மாடலிங்ல ஜாலியா இருந்தேன்

‘புரூஸ்லீ’யில் என்ன கேரக்டர்?: ஐ.ஜி பொண்ணா நடிச்சிருக்கேன்

திருப்புமுனை: ‘வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்’ தெலுங்குப் படம். அதோட ஹிட்டுக்கு அப்புறம் தெலுங்கில் பிஸியாகிட்டேன்!

பிடிச்ச தத்துவம்: ‘எதை நினைக்கிறாயோ... அதுவாகவே ஆகிறாய்!’

ஸ்லிம் சீக்ரெட்: பேஸிக்கா நான் விளையாட்டு வீராங்கனை. கராத்தேல பிளாக் பெல்ட். டெய்லி ஜிம் ப்ராக்டீஸ் எல்லாருக்குமே முக்கியம்னு நினைக்கிறேன். அதை எப்பவும் விட மாட்டேன்!


சினிமாவில் என்ன லட்சியம்?: எங்க ஃபேமிலிக்கு சினிமா பேக்ரவுண்ட் கிடையாது. ஸோ, எந்தத் திட்டமிடலும் எனக்கு இருந்ததில்லை. ஆனாலும் கடவுள்
என்னை வழிநடத்திட்டுப் போறார்!

மறக்க முடியாதது: ‘‘ ‘புரூஸ்லீ’யில் சிரஞ்சீவி சார்கிட்ட பேசினது

நீங்க கொஞ்சம் அதிக உயரமோ?:  ஹைட் எல்லாம் கேமரால ட்ரிக் பண்ணிக்குவாங்க! சினிமாவில் உயரம்  முக்கியமில்ல.. டேலன்ட் இருந்தா ஃபீல்டுல நிக்கலாம்!

பிடிச்சதில் டாப் ஃபைவ்: ட்ராவல், என்னோட ஸ்மைல், டெய்லி ஜிம் ப்ராக்டீஸ், ஸ்விம்மிங், கோல்ஃப்