ஜோக்ஸ்



‘‘என்ன டாக்டர்! ஒரு வருஷமா வர்றேன்... எனக்கு என்ன வியாதின்னே சொல்ல மாட்டேங்கிறீங்க?’’‘‘உங்களுக்கு வெளில சொல்ல முடியாத வியாதி... அதான்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘எல்லா பேஷன்ட்களையும் கவனிக்க அழகழகா நர்ஸ்களை அனுப்பிட்டு, என்னை கவனிக்க மட்டும் நீங்களே வர்றீங்களே, ஏன் டாக்டர்?’’
‘‘அவங்க எல்லாம் ஏழெட்டு வருஷமா பெட்ல இருக்காங்க. நீங்க இப்பதானே அட்மிட்
ஆகியிருக்கீங்க?!’’
- மு.மதிவாணன், அரூர்.

‘‘பயமா இருக்குய்யா...’’
‘‘ஐயோ... அவங்க அரெஸ்ட் பண்ண வரலை. நம்ம பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரங்க தலைவரே!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘மேடைக்கு முன்னாடி நாலஞ்சு குண்டர்கள் உக்காந்திருக்காங்களே, எதுக்குய்யா?’’
‘‘உங்க பேச்சைக் கேக்காம இடையிலே எழுந்து போறவங்களை மிரட்டி உக்கார வைக்கத்தான் தலைவரே!’’
- அ.இராஜப்பன், சென்னை-91.

‘‘டாக்டர்! மெமரி கார்டை தெரியாம முழுங்கினதுல இருந்து வயித்துக்குள்ள அங்கங்கே குத்துது...’’
‘‘நீங்க எதுக்கு மெமரி கார்டு பூராவும் குத்துப்பாட்டா பதிஞ்சு வச்சீங்க?’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் போலீஸ்காரரா இருந்தாலும், அவருக்கு உடம்பு சரியில்லனா ‘செக்கப்புக்குத்தான்’ போவாரே தவிர ‘லாக்கப்புக்கு’ போக மாட்டார்.
- உடம்பு சரியில்லாத சமயங்களிலும் ‘உல்டாவாக’ சிந்திப்போர் சங்கம்
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

ஸ்பீக்கரு...

மேடையில் எனக்கு ஓரமாக சீட் போட்டிருக்கிறார்கள். என்னைக் கட்சியில் ஓரம் கட்டுகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்..?
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.