ஜோக்ஸ்
கூடியிருக்கும் கூட்டத்தினரிடம் ஒரு விஷயத்தை மட்டும் நான் சொல்ல ஆசைப்படுகிறேன்...’’ ‘‘அந்த ஒரு விஷயத்தை சொல்லிட்டீங்கன்னா, வந்த ஒருத்தரும் கிளம்பிடுவாரு தலைவரே..!’’ - அஜித், சென்னை-126.
திருடினது கபாலி இல்லைன்னு எப்படி ஏட்டய்யா இவ்வளவு உறுதியாச் சொல்றீங்க..?’’ ‘‘கபாலின்னா இந்நேரம் திருடின வீட்டுல இருந்து நமக்கு செல்ஃபி அனுப்பியிருப்பானே..!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
கொஞ்சம் வெயிட் கூடியிருக்கு...’’ ‘‘ஆமாம் டாக்டர்! இந்த நர்ஸ் என்னைப் பார்த்தாலே ‘பூரிச்சு’ப் போயிடுறாங்க... அதனாலதான் அவங்க வெயிட் ஏறிடுச்சு போல!’’ - அ.இராஜப்பன், சென்னை-91.
தலைவர் வாழ்க்கையே வெறுத்த மாதிரி இருக்காரே... கோர்ட்ல இருந்து குற்றப்பத்திரிகை வந்ததா?’’‘‘இல்லே... மகளிரணித் தலைவிகிட்ட இருந்து கல்யாணப் பத்திரிகை வந்தது!’’ - மு.மதிவாணன், அரூர்.
நீங்க ரெண்டு டாக்டர்கள் ஆபரேஷன் பண்றதை இன்னொரு டாக்டர் எதுக்கு டி.வி.யில பார்த்துக்கிட்டு இருக்காரு?’’ ‘‘அவரு மூணாவது அம்பயர். பேஷன்ட் அவுட்டானா பார்த்து சொல்வாரு!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் ‘நட்சத்திர’ ஆமையா இருந்தாலும், அதை ‘ஹீரோவா’ நடிக்க வைக்க முடியுமா? - ஓட்டலில் ‘ஆமை வடை’ கிடைக்காமல் அல்லல்படுவோர் சங்கம் - அ.இராஜப்பன், சென்னை-91.
ஸ்பீக்கரு...
‘‘இப்போது ேபாலீஸ் வேனிலும், குற்றவாளிக் கூண்டிலும் ஏறிக்கொண்டிருக்கும் நம் தலைவர், 2016ம் ஆண்டில் அரியணையிலும் ஏறுவார் என்பதை...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
|