வலைப்பேச்சு



ஃபேஸ்புக்

பெண் பார்க்கப் போனவனை பிரமிக்க வைத்துவிட்டார்கள். சொஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, ம்... பெரிய இடம்னு சொல்லாம சொல்லிட்டாங்க.
# ஒரு பெரிய வெங்காயத்தின் சின்னஞ் சிறு கதை.
- சம்பத் இளங்கோவன்

40 அடி சுவற்றின் மீது செக்ஸ்; தவறி விழுந்து பிரான்ஸ் காதல் ஜோடிகள் உயிரிழப்பு!
# புடிச்ச வேலைய செஞ்சுக்கிட்டே சாகுறதெல்லாம் ஒரு வரம்.
- சிவகுமார் செல்வராஜ்

‪இனிமேல் இந்தியக் கரன்சியை ‘மாண்புமிகு ரூபாய்’ என்று அழைப்போமாக...
# ரூபாய் மதிப்பு ரொம்ப குறைஞ்சு போச்சாமே?
- சுந்தரம் சின்னுசாமி

பெங்களூரு மாநகராட்சி தேர்தல்: போட்டியிட்ட 7 வார்டுகளிலும் அதிமுக தோல்வி! 6ல் டெபாசிட் காலி.
‪#‎ அம்மா‬வுக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் தேர்தல் நடத்தி ஏமாத்துறீங்களா? முடிஞ்சா, பெங்களூரு மாநகராட்சிக்கான வாக்குப் பதிவை எங்கள் தமிழகத்தில் நடத்திப் பாருங்கள்!
- இளையராஜா டெண்டிஸ்ட்



செல்ஃபி எடுத்துக்கொண்டோம், அவரையும் மீறி முன்னே எட்டிப் பார்த்து அவரை மறைத்தது அவரது கர்வம்!
- ஹாஹோ சிரிப்பானந்தா

முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில் ‘தென்றல் நகர்’. சென்னைக்கு மிக அருகில், வெறும் 120 நிமிட (விமான) பயணத்
தொலைவில்!
# 2050ல் ஒரு வௌம்பரம்...
- சம்பத் இளங்கோவன்

வெங்காயத்தை உரிக்கும்போது வந்த கண்ணீர், இப்போது
வாங்கும்போதே வருகிறது...
- சுப்ரமணியம் கே

‪பசி என்பது ஓர் உணர்வுதான். ஆனால் பணம் இல்லாதபோது ஏற்படும் பசி அவமானமாகி விடுகிறது!
- பாண்டியன் பிஎஸ்ஹெச்பி

‘‘110 விதி அறிக்கை வாசித்தே கின்னஸ் சாதனை புரிந்த எங்களின் முன்னாள் மக்கள் முதல்வரே...’’ என சரத் & செ.கு குரூப் இந்நேரம் கிளம்பியிருக்கணுமே!
- எழிலன் எம்

சென்னை கொசுவுக்கும் விருத்தாசலம் கொசுவுக்கும் வித்தியாசம் தெரியலே. செம கடி. அதே எரிச்சல். உலகமயமாக்கல் கொசுமயமாகி விட்டதா?
- பெ. கருணாகரன்

வெள்ளக்காரன் ப்ரட்ல ஜாம் தடவறதுக்கு முன்னாலயே தமிழன் வெத்தலைல சுண்ணாம்பு தடவிட்டு இருந்தான்!
- ஜெயகிருஷ்ணன் சுப்ரமணியம்

பழைய சோறுக்கு ‘ஐஸ் பிரியாணி’ன்னு பேர் வச்சவன் ஒரு கவிஞனாத்தான் இருக்கணும்!
- மோகனா சுந்தரம் மீனாட்சி சுந்தரம்

ட்விட்டர்

@teakkadai
இந்த வாரம் வெளியான புதுப்படங்கள் எல்லாம் சுமாருக்கும் கீழே என்பது ‘அன்பே வா’ பல திரையரங்குகளில் திரையிடப்பட்டதில் இருந்து தெளிவாகிறது.

@thoatta  
போன ஜென்மத்தில் தவறு செய்தவர்களை இந்த ஜென்மத்தில் சட்டமன்ற மேஜைகளாய் படைத்துள்ளார் கடவுள்...



@prakashalto  
அப்துல் கலாம் தபால் தலை வெளியீடு: செய்தி
# தபால் யார் பயன்படுத்தறாங்க? அறிவியல் துறை சம்பந்தமான ஐடியாவே தோணைலயா? எதுக்கு இந்த தேவையில்லாத ஆணி?

@Siva_D_offl   
எனக்கும் பொண்ணு பேர நெஞ்சில குத்திக்க ஆசைதான்! நாளைக்கு வர்ற பொண்டாட்டி ‘ஏண்டா இன்னொருத்தன் பொண்டாட்டி பேர குத்திருக்கே’ன்னு கேட்டு கொமட்ல...

@kgkrishn
அலாரம் என்பது நமக்கு ஆழ்ந்த தூக்கம் வர ஆரம்பிக்கும் போது அடித்து எழ வைக்கும் ஒரு கருவி!

@thoatta  
டீசல் விலை குறைஞ்சாலும் குறைஞ்சுது, போற வர்றவனெல்லாம் ஈவிகேஎஸ் உருவ பொம்மையை எரிக்கிறான்!

@manipmp  
‘மிஸ்டு கால்’ மூலம் மதுவுக்கு எதிராக பிரசாரம்: தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை அறிவிப்பு!
# டாஸ்மாக்கில் உட்கார்ந்துக்கிட்டே மிஸ்டு கால் கொடுப்பாங்க...

@NamVoice
படித்தோ படிக்காமலோ வெறும் கையுடன் வீட்டிலிருந்து கிளம்பும் அனேக தமிழக இளைஞர்களின் புகுந்த வீடு
# சென்னை

@writernaayon  
ஆற அமர யோசிக்க வேண்டியுள்ளது, வெயிலில் நிறுத்திய பைக்கினை எடுப்பதற்கு முன்!

@gpradeesh  
அ.தி.மு.க. பெங்களூர்ல போட்டியிட்ட 7 வார்டிலும் தோல்வி, 6ல டெபாசிட் காலி. இதுல இந்தம்மா அந்தமானுக்கு வேற ஒரு குரூப்பை பலாப்பழத்தோட அனுப்பீருக்கு

@arthi_thiru  
நூறு ரூபா கொடுத்து பாக்கற படத்தையே அலசி ஆராயற இந்த புத்தி, ஏனோ ஓட்டுப் போடும்போது வருவதில்லை...

@thamizhinii  
தாமரை எப்போதும் தனக்கென உயரத்தை இறுதி செய்து கொள்வதில்லை; தண்ணீரின் உயரம் எவ்வளவோ அதனைத் தாண்டி
வளர்கிறது!

@kuma rfaculty  
‘டாடி மம்மி வீட்டில் இல்ல... தடை போட யாருமில்ல...’ பாடல் கூட்டுக் குடும்ப முறை உடைந்ததை வெளிச்சம் போட்டுக்
காட்டுகிறது...

@meenammakayal   
மௌனம் எப்போதுமே தவறாகத்தான் மொழி பெயர்க்கப்படும்.