குடியுரிமை
நெட் ரியாக்ஷன்
விஸ்வரூபம் ரிலீஸ்ல 600 தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாதுன்னு சொன்னாங்க. இப்ப 6000 டாஸ்மாக்குக்கு பாதுகாப்பு கொடுக்குறாங்க! எப்பிடி?
தம்பீ... பெண் சிங்கங்களோட பாதுகாப்புல ஆண் சிங்கங்கள் எல்லாம் குடிச்சிக்கிட்டிருக்கு!
குடிப்பவன் குடியாலும் அதைத் தடுப்பவன் போலீஸ் அடியாலும் சாவான்!
இவன்தான்டா ‘மகிழ்’மதி அரசன்!
குடிகாரர்களின் இப்போதைய ரியாக்ஷன் என் மேல கைய வச்சே... 80 ஆயிரம் போலீஸ் உன்னை தூக்கிப்போட்டு மிதிக்கும். கவர்மென்ட் சப்போர்ட் எனக்கு இருக்குடா!
ஹலோ, B2 போலீஸ் ஸ்டேஷனா? இங்க என் பொண்டாட்டி குடிக்க விடாம தகராறு பண்றா... உடனே வந்து கைது பண்ணுங்க சார்!
 ஐடியா 1: டாஸ்மாக்ல தானே பிரச்னை பண்றாங்க. டக்குனு ரேஷன் கடையில சரக்கு விக்கலாம்ல! ஐடியா 2: எதுக்கு தனியா டாஸ்மாக்குக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கணும்? பேசாம போலீஸ் ஸ்டேஷன்லயே பாட்டில் விக்கலாம்ல!
இத்தனை நாளா குடிக்கிறவனை விரட்டி விரட்டி ‘ட்ரங்க் அண்ட் டிரைவ்’ல புடிச்ச பாவத்துக்கு... இப்ப ஒவ்வொரு பார் வாசல்லயும் வாட்ச்மேன் வேலை பார்க்க வச்சான் பாருய்யா... அங்க நிக்கிறாண்டா ஆண்டவன்! # ஆண்டவன் இருக்கான் கொமாரு!
டாஸ்மாக் கடைகளைத் தாக்கியவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். (அங்கு கடைக்குள் நடைபெற்ற ஒரு உரையாடல்...) போலீஸ்: ஓடுடா ஓடுடா.... ஒருவன்: சார் நான் இங்க குடிக்க வந்தேன் சார்!!! போலீஸ்: எங்க ஊதுடா... ஒருவன்: ப்ஊ.... போலீஸ்: சாரி சார், நீங்க போங்க..!
|