ஆசை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



 ‘தப்ஸி’ன்னா ‘பெண்துறவி’ங்கிற அர்த்தம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, அந்த அம்மணியைப் பார்த்தா துறவிக்கும் திருமண ஆசை வந்துடும் போலய்யா!
 எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு குறித்து விளக்கிய ‘வேலை நிச்சயம்’ பகுதியில் அந்தப்பதவியின் பெருமைகளையும் தெரிந்துகொள்ள முடிந்தது.
 எம்.கே.அருள்ராஜா, அரியலூர்.

சாதனையாளர்களை அப்போதைக்குக் கொண்டாடிவிட்டு மறந்து விடுவதே வழக்கம். கடந்தகால பிளஸ் 2 சாதனையாளர்களையும், சாதிக்க வைத்த ஆசிரியர்களையும் பேட்டி கண்டு, இன்றைய மாணவர்களுக்கு உதவ வழி செய்ததன் மூலம், மாணவர் அக்கறையில் மற்றவர்களை நீர் முந்திக்கொண்டீர்!
ஆர்.தனபால், சென்னை63.

ரோடு மகேஷ் பகிர்ந்துகொண்ட ஜப்பான் அனுபவம் சுவாரஸ்யம். அங்கு வீடுகளைப் பூட்ட வேண்டியதில்லை என்ற சேதி ஆச்சரியம்!
 வி.பத்மா, ஸ்ரீரங்கம்.

‘நான் சச்சின் இல்லை’ என்ற இசைப்புயலின் கருத்து அவரது அடக்கத்தைக் காட்டுகிறது. அடக்கம் நிறைய இருப்பவர்களைத் தேடித்தானே வெற்றி பயணிக்கிறது!
 அ.குணசேகரன், புவனகிரி.

விபத்துகளின்போது மட்டும் எழுந்து அடங்கி விடுகிறது ‘மகரஜோதி’ சர்ச்சை. தன்னை நம்பி வருபவர்களை ஆபத்தில்விட அந்த ஐயப்பனே விரும்புவதில்லை என்பதை கேரள அரசும் சபரிமலை கோயில் நிர்வாகமும் உணரவேண்டும்.
 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

‘வைப்ரண்ட் நேச்சர்’ கடையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சாலே போதும், நம்ம ஃபியூச்சர் வைப்ரேஷன் இல்லாம போகும்!
 ப.அண்ணாமலை, ஒட்டன்சத்திரம்.

‘பெண்கள் இல்லாத தமிழகம்’ கட்டுரை சிந்திக்க வைத்தது. பெண்களைக் கடவுளாக வழிபடும் பூமியில், என்றுதான் ஒழியுமோ பெண் சிசுக் கொலை கொடுமை?
 எஸ்.எம்.பாலசுப்ரமணியன், போடிநாயக்கனூர்.

வெங்காயம் கிலோ பத்து ரூபாய்னதும், ‘எங்கப்பா’ன்னு அட்ரஸ் பார்த்தா மகாராஷ்டிரான்னு சொல்லி மல்லாக்க விழ வச்சிட்டீரே, உம்மையெல்லாம் என்ன செய்றது?
 ரஞ்ஜனிப்ரியன்,பள்ளிப்பாளையம்.

சாலமன் பாப்பையாவின் வாழ்க்கைத் தொடர் சாதிக்கத் துடிக்கும் எண்ணற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டி.
 சேவியர் கோமஸ், தூத்துக்குடி.

ஜாலியும் கேலியுமா இந்த வருஷ கச்சேரி ஒரே அமர்க்களம். கடைசிவாரத்துல கூட திருவிளையாடல் பாணியில பின்னிட்டாளே ராமய்யரும் சுப்பண்ணாவும். பேஷ்... பேஷ்!
 சந்திரமோகன், அம்பாசமுத்திரம்.

‘கண்ணதாசன் பேரன் பாட்டெழுத வர்றார்’னா அது ஆச்சரியம் இல்லை. ஹீரோவாகிறார் என்கிற தகவல்தான் புதுசு. வாழ்த்துவோம் வாரிசை!
 முகுந்தன், வேட்டவலம்.