பர்சனல்



‘‘குட் மார்னிங் சார்... கூப்பிட்டீங்களா?’’ - மேனேஜர் அறைக் கதவைத் தட்டி நுழைந்தான் ட்ரெயினி எஞ்சினியர் ரமேஷ்!‘‘ஆமாம் மிஸ்டர் ரமேஷ். ஒரு முக்கியமான விஷயம்...’’‘‘சொல்லுங்க சார்!’’‘‘நேத்திக்கு நீ டைப்பிஸ்ட் சுமதியை லவ் பண்றதா எஸ்.எம்.எஸ் அனுப்பினியாமே..?’’‘‘ம்ம்... வந்து... ஆமாம் சார்!’’‘‘டேம் இட்... நீ இந்த ஆபீஸ்ல ஜாயின் பண்ணி ஒரு வாரம்தான் ஆகுது. அதுக்குள்ள...’’

‘‘சார், நான் விளையாட்டுக்காகவோ தப்பான எண்ணத்துலயோ அப்படிப் பண்ணல. சுமதியை சின்ஸியரா லவ் பண்றேன்!’’‘‘இது ஆபீஸ்... லவ் பண்ற இடமில்ல... இனிமே இந்த மாதிரி செய்யாதே ரமேஷ்!’’‘‘சாரி சார். என் வேலையில் ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்க. என் பர்சனல் விஷயத்தில தயவுசெஞ்சு தலையிடாதீங்க ப்ளீஸ்!’’ - கறாராக மறுத்தான் ரமேஷ்! ‘‘அதைத்தான் ரமேஷ் நானும் சொல்ல வர்றேன். என் பர்சனல் விஷயத்துல நீ தலையிடாதே... தயவுசெஞ்சு!’’‘‘வாட்,  என்ன சார் சொல்றீங்க?’’ஏற்கனவே திருமணமான அந்த மேனேஜர், குறும்பாகச் சிரித்தார்.

சாயம் வெ.ராஜாராமன்