Like and Share



அண்ணே ஒரு விளம்பரம்...

ஐ.பி.எல் 2015க்கு முதல் திரி கொளுத்தியிருப்பது இந்த விளம்பரம்தான். ‘பெப்ஸி விளம்பரத்தை பொதுமக்களே தயாரித்து அனுப்பலாம். அது ஐ.பி.எல்லில் இடம் பெறும்...’ - இதுதான் மேட்டர். அதைச் சொன்ன விதம் ஹாட்டிலும் ஹாட்டர். ‘எப்படி விளம்பரம் பண்றதுன்னு நாங்க சொல்லித் தர்றோம்’ என குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வந்து ரன்பீர் கபூர், அஜய் தேவ்கன் மாதிரி நடிகர்களைப் படுத்தி எடுக்கிறார்கள்.

கடைசியாக விராட் கோஹ்லி வந்து ஒரு பாட்டியிடம்... ‘‘அப்போ நான் என்ன செய்ய..?’’ என்கிறார்.பதிலுக்கு பாட்டி, ‘‘விளம்பரம் எல்லாம் நாங்க பார்த்துக்கறோம்... நீ ஒழுங்கா கிரிக்கெட்ல கவனம் வை!’’ எனப் போட்டுத் தாக்குவது பொள சிக்ஸர்!

மீம்ஸ்

கௌப்புறாய்ங்கய்யா!

‘சென்னையில் டாக்ஸியிலோ, ஆட்டோவிலோ தனியாகப் பயணிக்கும் பெண்ணா நீங்கள்? வாகனத்தில் ஏறும் முன்பாக அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 9969777888 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள். நீங்கள் பயணிக்கும் வாகனத்தை ஜி.பி.எஸ். மூலம் மாநகர போலீஸ் கண்காணிக்கும். இது இலவச எஸ்.எம்.எஸ். சேவை. போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா இந்த சேவையைத் துவக்கி வைத்திருக்கிறார்!’

- இப்படி ஒரு செய்தி வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என ஒரு இடம் விடாமல் கதறிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இப்படி ஒரு சேவை சென்னையில் கிடையாது. மும்பை மாநகரில் கடந்த ஆண்டு பெண்கள் தினத்தின்போது இந்த சேவை துவக்கப்பட்டது. (ராகேஷ் மரியா அந்த நகரின் கமிஷனர்தான்!) இந்தச் செய்தியில் மும்பைக்கு பதிலாக சென்னையை ஒட்டி, வதந்தி ஆக்கிவிட்டார்கள். கொஞ்ச நாள் முன்பாக இது ஐதராபாத்திலும் உலவியது!

வாட்ஸப் கீஷீஷ்..!!

ஒரு பையன் தெரியாத்தனமா தன்னோட செல்லை ஃபார்மேட் பண்ணிட்டான். நம்பர் எல்லாமே போயிடுச்சு. சிங்கிள் நம்பர் கூட அவன் ஞாபகத்துல இல்ல. அப்போ அவனோட காதலியும் நண்பன் ஒருத்தனும் அவனுக்கு மிஸ்டு கால் கொடுத்தாங்க. யாரு என்னன்னு சத்தியமா அவனால கண்டுபிடிக்க முடியல.

 ‘Who are you?’ னு ரெண்டு பேருக்குமே ஒரு மெசேஜை தட்டி விட்டான். அதுக்கு காதலியும் நண்பனும் தந்த ரியாக்ஷன்ஸ்...காதலி: என்னையா யாருனு கேக்குறே? போடா நாயே...   மி லீணீtமீ ஹ்ஷீu !நண்பன்: டேய் லூசு... How are youனு அடிக்கறதுக்கு Who are youனு அடிச்சிருக்கே. I am fineடா மச்சி! நண்பேன்டா!

அப்பா‘டெக்’கர்

டெக்னாலஜி சீனப்பெருஞ்சுவரான ஜியோமி, தனது 5வது பிறந்த நாளை முன்னிட்டு வெறும் ஐயாயிரம் ரூபாய்க்குள் ரெட்மீ 2ஏ எனும் 4ஜி போனை அறிவித்திருக்கிறது. அது தவிரவும், 55 இன்ச் ஸ்மார்ட் டி.வி ஒன்று, நம் எடை, பி.எம்.ஐ போன்றவற்றை கணித்து செல்போனுக்கு அனுப்பும் ஸ்மார்ட் எடை மிஷின் ஒன்று, நேரடியாக யு.எஸ்.பி பொருத்தி சார்ஜ் செய்யக் கூடிய ஸ்மார்ட் ப்ளக் பாயின்ட் ஒன்று எனப் பல ஸ்மார்ட் பொருட்கள் ஜியோமியால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம், அமேசான் இணையதளம் ‘டேஷ் பட்டன்’ என ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. வீட்டுச் சுவற்றில் எங்கு வேண்டுமானாலும் ஒட்டி வைத்துக்கொள்ளக் கூடிய இந்த பட்டன், வைஃபி மூலம் இணையத்தில் இணைந்தே இருக்கும்.

வாஷிங் பவுடர், ஷேவிங் பிளேடு என அன்றாட உபயோகப் பொருட்கள் தீர்ந்துவிட்டால் இந்த பட்டனை ஒரு தட்டு தட்டினால் போதும்... அமேசானுக்கு ஆர்டர் போய், வீடு தேடி பொருள் வந்துவிடும். தனது பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு இந்த பட்டனை இலவசமாகவே தரவிருக்கும் அமேசான், இதே மாதிரி பல ஸ்மார்ட் வீட்டுப் பொருட்களைத் தயாரிக்க இருக்கிறதாம்.இனி எல்லாமே ஸ்மார்ட்தான்!

இன்ஸ்டாகிராமியம்

இதை நாங்க காட்டணும். ரெண்டு படம் தமிழ்ல நடிங்களேன்... ரொம்ப நாளாச்சு!