‘‘மக்கள் எல்லாம் ரொம்ப தெளிவா
இருக்காங்கய்யா...’’
‘‘எப்படிச் சொல்றீங்க தலைவரே..?’’
‘‘நூறு ரூபா விலைக்கும் கீழே இருக்கிற செருப்புகளா பார்த்துத்தான் என் மேலே வீசறாங்க!’’
- -மு.மதிவாணன், அரூர்.
‘‘தலைவர்கூட ஜெயில்ல இருந்த பல பேர் இன்னைக்கு தலைவரை சந்திச்சுப் பேசறாங்க...’’
‘‘அப்படின்னா ‘கட்சி ஜெயில் வீரர்கள்’ கூட்டம் நடக்கப்போகுதுன்னு சொல்லு!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் வி.ஐ.பி.ன்னாலும், கல்யாணத்துக்கு ‘கூரை’ப் புடவைதான் வாங்கியாகணும்; ‘கான்க்ரீட்’ புடவை எல்லாம் வாங்க முடியாது!
- எட்ட முடியாத கனவுகளுக்குக் கொட்டாவி விடுவோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
என்னதான் ஒருத்தர் கோயில்ல வேண்டிக்கிட்டு தரையில போட்டு பொன்னி நெல்லு அரிசிச் சோறு, பாஸ்மதி அரிசிச் சோறு சாப்பிட்டாலும், அதையும் ‘மண் சோறு’ன்னுதான் சொல்வாங்க.
- கே.ஆனந்தன், தர்மபுரி.
‘‘தலைவர் ஆஸ்பத்திரிக்கு வர்றார்னு சொன்னதும் டாக்டர் தலையில கை வச்சிக்கிட்டு உக்கார்ந்துட்டாரே... ஏன்?’’
‘‘போன தடவை
வரும்போது இருந்த
நர்ஸ், இப்ப அவர் கட்சி
மகளிரணித் தலைவியா
இருக்கறாங்களே!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘அப்பவே நான் படிச்சு படிச்சு
சொன்னேன்...’’
‘‘நீங்கதான் படிக்கவே இல்லையே
தலைவரே..!’’
- சி.சாமிநாதன், சரவணம்பட்டி.
‘‘ஏன் தலைவரே டாக்டர் பட்டத்தை வேணாம்னு சொல்லிட்டீங்க..?’’
‘‘பன்றிக்காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கச் சொன்னாங்கய்யா. அதான்...’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.