ஜோக்ஸ்



‘‘உங்களை ரிலீஸ் பண்ணிடுவாங்கன்னு எந்த நம்பிக்கையில சொல்றீங்க தலைவரே..?’’

‘‘வெளியே இருந்துதான் ஆதரவு தருவேன்னு அறிக்கை விட்டிருக்கேனே!’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘குடிக்க நல்ல தண்ணீர் இல்லாமல், நல்ல சாலை வசதி இல்லாமல், பேருந்து வசதி இல்லாமல் நீங்கள் கஷ்டப்படுவதைப் பார்க்க தைரியமில்லாமல்தான் தேர்தலில் ஜெயித்த பிறகு தொகுதிக்கே வருவதில்லை என்பதை...’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘சுவிட்சர்லாந்துல இருந்து நிச்சயம் மீட்டுக்கொண்டு வருவேன்னு தலைவர் சொல்றாரே... கறுப்புப் பணத்தையா?’’
‘‘இல்லை... அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு அங்க போன மகளிரணித் தலைவியை!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.

‘‘குற்றவாளிக்கும், போலீசுக்கும் என்ன வித்தியாசம்..?’’
‘‘குற்றவாளி லாக்அப்புக்கு பயப்படுவான்; போலீஸ் வாட்ஸ்அப்புக்கு பயப்படுவாரு!’’
- பாலா சரவணன், சென்னை.

‘‘என் மனைவிக்கு சரியா சமைக்கத் தெரியலை டாக்டர்...’’
‘‘அதை ஏன் என்கிட்ட சொல்றீங்க..?’’
‘‘நான் நல்ல சாப்பாடு சாப்பிடணும்னு நீங்கதானே சொன்னீங்க!’’
- சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் ஆஸ்பத்திரியை டாக்டர் கட்டினாலும், அதை ‘நர்சிங்’ ஹோம்னு தான் சொல்லணும். ‘டாக்டர்ஸ்’ ஹோம்னு சொல்ல முடியாது.
- நர்ஸைப் பார்க்க மட்டுமே நர்சிங் ஹோம் போவோர் சங்கம்
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘தலைவர் ஏன் திடீர்னு கட்சியைக் கலைச்சுட்டார்..?’’
‘‘கூட்டணிக்கு ஒபாமா
ஒத்துக்கலையாம்..!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.