குங்குமம் டாக்கீஸ்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         டுத்த ரஜினி பட ஃபீவர் ஆரம்பிச்சாச்சு. ‘எந்திரன்’ல மூணு கெட்டப் ஒர்க் அவுட் ஆனதால, அடுத்த ‘ராணா’லயும் அவருக்கு மூணு கெட்டப் கொடுத்திருக்கார் படத்தை டைரக்ட் பண்ற கே.எஸ்.ரவிக்குமார். மூணு ஹீரோயின்களுக்கு அடிக்குமா ஜாக்பாட்..?

ஜினி படம் ரெடியாக, அடுத்த கமல் படம் ரெடியாகலைன்னா எப்படி..? அதுவும் செல்வராகவன் டைரக்ஷன்ல ரெடியாகுது. அதில உலகநாயகன் கூட ஜோடி கட்டப்போறது ‘கலைமாமணி’ அனுஷ்காவாம்... அப்படிப்போடு மக்கா..! அடுத்து அனுஷ்காவுக்கு தமிழ்ல ரிலீசாகற படம் ‘வானம்’. அதுல எப்படியும் அவார்டு வாங்கிடணும்ங்கிற ஆசையில சொந்தக் குரல்லயே செம்மொழியில டப்பிங் பேசியிருக்காம் அனுஷ்க். அடுத்த படத்தில கவிதையே பாட வச்சிடுவார் கமல்...

ராதாவோட பொண்ணு கார்த்திகா மூணு மொழிகள்ல நடிச்சுக்கிட்டிருந்தாலும், படிப்பிலும் படு சுட்டி. பிளஸ் 2 முடிச்சுட்டு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்ல பேச்சுலர் டிகிரி படிக்குது கார்த்து. நடிப்பு அம்மா போல, படிப்பு அப்பா போல..?

மீனாவுக்கு சமீபத்தில பிறந்த பொண்ணுக்கு வீட்ல நடந்த பெயர் சூட்டு விழாவில ‘நைனிகா’ன்னு பேர் வச்சிருக்காங்க. நச்சுன்னு இருக்கில்ல..?

தினோராம் தேதி ரிலீசாகவேண்டிய ‘நடுநிசி நாய்களை’ ஒரு வாரம் தள்ளிவச்சிருக்க  கௌதம் மேனன் சொன்ன காரணம், ‘‘அதுக்கு ஒரு வாரம் முந்திதான் ‘யுத்தம் செய்’யும், ‘தூங்கா நகரமு’ம் ரிலீசாகியிருக்கு. அதுகளோட ஓட்டத்துக்காகத்தான் இந்த இடைவெளி...’’ குட் தாட்..!

‘முத்துக்கு முத்தாக’ படத்தில ஹரீஷ்  ஓவியா, விக்ராந்த்  மோனிகான்னு ஜோடிகள் இருந்தும் ஹீரோ, ஹீரோயின் யாருன்னு கேட்டா அப்பா, அம்மாவா வர்ற இளவரசுவையும், சரண்யாவையும்தான் சொல்றா£ர் டைரக்டர் ராசு மதுரவன். பெத்தவங்களை ஹீரோ ஆக்கிய பெருமையாளர்..!

மிழ்ல வெளுத்துக்கட்டிய ஆர்.பார்த்திபன் இனி மலையாளத்தில சம்சாரிக்கிறதையும் பார்க்கலாம். மாதவ ராம்தாஸ் டைரக்ட் பண்ற ‘மேல்விலாசம்’ மூலமா மலையாளத்தில என்ட்ரி கொடுக்கிற அவர், மலையாளத்தில பொளந்துகட்டி டப்பிங்கும் பேசியிருக்கார். வித்தகச் சேட்டன்..!

‘குப்பி’ டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷோட ‘காதலர் குடியிருப்பு’, பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட உண்மைச் சம்பவங்களை அடியொற்றி இருந்தாலும், குடும்பத்தோட எல்லாரும் பார்க்கிற ‘யு’ சர்டிபிகேட் கொடுத்திருக்கு சென்சார். கத்திரிக்கும் கருணை உண்டு..!

சைலன்ஸ்

இடியட்ஸ்ல மீண்டும் மாறுதல் ஏற்பட்டு பழைய ஹீரோவே திரும்ப வந்ததுக்கு துட்டுதான் காரணம்கிறாங்க. ரெண்டாவதா பேசப்பட்ட ஹீரோ ரெண்டு மொழிக்குமா சேர்த்து முழி பிதுங்கற மாதிரி ஒரு அமௌன்ட் கேட்க, புதுசைவிட பழசே மேல்னு இவரை விட்டுட்டு அவர்கிட்ட போய்ட்டாங்களாம். இப்ப மட்டும் ‘முடிவெட்ட’ ஒத்துக்கிட்டாராக்கும் முதல் ஹீரோ..?

அந்த உயரமான ஹீரோவை வச்சு அவரோட சொந்தப்படத்தையே டைரக்ட் பண்ணவிருக்க ஆட்டநாயகன் ரெண்டு தடவை ஷெட்யூல் போட்டும் ஷூட்டிங் போகலையாம். காரணம் ‘கடவுள்’ பட டைரக்டரோட படம். அதுல நடிக்கிற வளந்த ஹீரோ, படம் முடியாததால சொன்னபடி இவர் படத்துக்கு வர முடியலையாம். அப்சட்ல இருக்காராம் மிஸ்டர்.ஆட்டம்..!
 கோலிவுட் கோயிந்து