கவ்வுது கவித!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineச்சின், சேவக், டோனி, யுவராஜ், ரெய்னா என ஜாம்பவான்கள் இருக்கிற நிலையில், இப்போது இல்லையேல் எப்போதும் வாய்ப்பே இல்லை. கோப்பையை வெல்ல கிடைத்த வாய்ப்பை நழுவவிட மாட்டார்கள் நமது வீரர்கள்!
 ஆர்.தனபால், சென்னை63.

டுகளத்தையும் இளைஞனையும் அச்சுப் பிறழாமல் காட்டிய உமது விமர்சனம் நல்ல நேர்த்தி சாரே!
 எல்.எம்.அபிதா, திருவண்ணாமலை.

நூடுல்ஸ், பாஸ்டா எப்ப வேணாலும் பண்ணிக்கலாம். கார்த்திகா போல இன்னொரு பொண்ணு கிடைப்பாங்களா? இயக்குனர் ஆனந்த் முறைச்சதுக்கு இதுதான் காரணம் அம்மணி!
பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

பில்லுல கோல்மால் பண்ற செல்போன் நிறுவனங்கள் இனி அடக்கி வாசிக்கும்னு தெரியுது. ‘நம்பர் மாத்தாமலேயே நிறுவனத்தை மாத்திக்கலாம்’ங்கிற வசதி தகவல்தொழில்நுட்பத் துறையில் ஒரு மைல்கல்லுதான்!
 பி.என்.ஜெய்சங்கர், திருவாரூர்.

ங்ஷன் பகுதியில் ‘குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டுப் போய்விட்ட தம்பதி’ பற்றிப் படித்தபோது அதிர்ந்துவிட்டோம். கலி முத்தித்தான் போச்சுய்யா.
 சி.மகேஷ், திருச்சி.

ரு போட்டோ எடுத்தோம்னா அதைக் கழுவி, பிரின்ட் போட்டு கைக்குக் கிடைக்க நாலு நாளாவது ஆகும். இப்ப என்னடான்னா, ‘பட்டம் விட்டுக்கிட்டே படமெடுக்கலாம்’ங்கிறீங்க. ம்ம்... வாழ்க சயின்ஸ்!
 எம்.ஜி.பரத், திண்டுக்கல்.

ழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் குறித்த கட்டுரை அவற்றைப் பயன்படுத்தும் கலைஞர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினால் அந்தப் புண்ணியம் உமக்கே உமக்குத்தான்!
 துரை சுப்ரமணியன், புத்தூர்.

வாசகர் சோலையில் பூக்கும் கவிதைப்பூக்கள் ஒவ்வொன்றும் அருமை. மனதைக் கவ்வுகிற கவிதைகளைத் தருவதற்கு நன்றி!
 ரா.திருமலை, சிதம்பரம்.

ம்பாதிக்க ஆயிரம் வழி இருக்குன்னு சொல்லித் தருது ‘வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்’ பகுதி. கீ ஹோல்டர் தயாரித்தும் வாழ்வின் வசந்த வாசலைத் திறக்கலாம்!
ரா.புண்ணியகோடி, மதுராந்தகம்.

‘கிரிக்கெட் போட்டி தியேட்டர்ல காட்டப்படலாம்’கிற குங்குமம் டாக்கீஸ் சேதி வித்தியாசம். சினிமாவுக்குப் போட்டியா கிரிக்கெட்டா!
தமிழ்ச்செல்வன், செங்கம்.

ங்குச்சந்தைக்கும் சிவபெருமானுக்கும் தொடர்பா? சுவாரஸ்யமாகத்தான் போகிறது சேமிப்புக்கு வழிகாட்டும் பங்குச்சந்தை தொடர்.
விக்னேஷ்வரன், புதுச்சேரி.

‘சண்டையில் தோற்கும் சேவல் உயிரை விட்டுவிடும்’ என்கிற தகவல் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வரவழைக்குது. ஒரு சிறந்த படைப்புக்காக சேவல் போன திசையெல்லாம் அதன் பின்னாலேயே பயணித்துத் திரிந்த இயக்குனர் வெற்றிமாறனையும் பாராட்டியே ஆக வேண்டும்.
தி.சங்கரவடிவு, முக்கூடல்.