ஜோக்ஸ்





‘‘நம்ம தலைவரோட கட் அவுட்டை வச்சு பாலாபிஷேகம் பண்றாங்களே... தலைவர் படம் எதுவும் ரிலீசாகியிருக்கா?’’
‘‘இல்லை... தலைவர் ரிலீசாகி இருக்கார்!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘எம்.பி.பி.எஸ் படிச்சாதான் டாக்டர் ஆக முடியும்னு சொன்னா ஏன் தலைவரே நம்ப மாட்டேங்கறீங்க..?’’
‘‘நானெல்லாம் வெறும் ரெண்டாவது தானேய்யா..!’’
- கே.ஆனந்தன், பி.பள்ளிப்பட்டி.

‘‘தலைவர் போன விமானம் ஏன் அவசரமா தரை இறங்குது..?’’
‘‘டேக் ஆஃப் ஆனதும் தலைவர் மைக் பிடிச்சு பேச ஆரம்பிச்சுட்டாராம்..!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘சட்டசபைக்கு கிளம்புற எம்.எல்.ஏ கிட்ட தொகுதி மக்கள் மிரட்டலா ஏதோ சொல்றாங்களே... என்னது?’’
‘‘வருஷத்துக்கு இத்தனை தடவைதான் சஸ்பெண்ட் ஆகலாம்னு சொல்லி அனுப்புறாங்க!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘தலைவர் அடிக்கடி ஜெயிலுக்குப் போயிட்டு வந்ததால, கட்சியில் ஒரு புதிய அணியை உருவாக்கிட்டாரு...’’
‘‘என்ன அது..?’’
‘‘கம்பிக்குள் வாழும் தம்பிகள் அணியாம்!’’
- அதிரை புகாரி, அதிராம்பட்டினம்.

‘‘பரஸ்பரம் விட்டுக் கொடுக்கறதுதான் காதல், டார்லிங்...’’
‘‘அப்ப எனக்கு வீட்ல பார்த்த ஃபாரீன் மாப்பிள்ளைக்கு என்னை விட்டுக் கொடுங்க டியர்...’’
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.

‘‘என்ன... உன் கணவர் உனக்கு மிஸ்டுகால் கொடுக்கறாரு..?’’
‘‘நான்தான் சொன்னேனே... அவரு என்கிட்டே பேசறதுக்கே பயப்படுவார்னு!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.