இந்தியாவின் இளம் சி.இ.ஓக்கள்!





கார்ட்டூன் சேனல் பார்க்கும் வயது, ஷ்ரவனுக்கும் சஞ்சய்க்கும். அதற்குள் கார்ட்டூன் பாத்திரங்களை உருவாக்கி உலவ விடும் பிரம்மாக்களாகிவிட்டனர். சென்னை, ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் பிள்ளபாங் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார் ஷ்ரவன். சஞ்சய் 6ம் வகுப்பு. சகோதரர்களான இந்த இருவரும் இணைந்து கோ- டைமன்ஷன்Õ என்ற நிறுவனத்தை நடத்துகிறார்கள். ஐபோன், ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான புரோகிராம்கள், கேம்ஸை உருவாக்கி ஆன்லைனில் வழங்குகிறது இந்த நிறுவனம். இப்போதைக்கு இந்தியாவின் இளம் சி.இ.ஓக்கள் ஷ்ரவனும், சஞ்சயும்தான்.

கார்ட்டூன் சேனல் பார்க்கும் வயது, ஷ்ரவனுக்கும் சஞ்சய்க்கும். அதற்குள் கார்ட்டூன் பாத்திரங்களை உருவாக்கி உலவ விடும் பிரம்மாக்களாகிவிட்டனர். சென்னை, ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் பிள்ளபாங் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார் ஷ்ரவன். சஞ்சய் 6ம் வகுப்பு. சகோதரர்களான இந்த இருவரும் இணைந்து Ôகோ- டைமன்ஷன்Õ என்ற நிறுவனத்தை நடத்துகிறார்கள். ஐபோன், ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான புரோகிராம்கள், கேம்ஸை உருவாக்கி ஆன்லைனில் வழங்குகிறது இந்த நிறுவனம். இப்போதைக்கு இந்தியாவின் இளம் சி.இ.ஓக்கள் ஷ்ரவனும், சஞ்சயும்தான்.

ஷ்ரவனின் கண்களில் ஆழ்ந்த ஞானம். சஞ்சயிடம் குறும்பு பொங்குகிறது. சாஃப்ட்வேர் தொழில்நுட்பம் பற்றி எதைக் கேட்டாலும் விரல் நுனியில் பதில் வைத்திருக்கிறார்கள். தந்தை குமரன் சுரேந்திரன், ஒரு ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளர். அம்மா ஜோதி, இல்லத்தரசி.

‘‘எல்லாத்துலயும் முன்மாதிரியா இருக்கணும்னு அப்பா அடிக்கடி சொல்லுவார். 4ம் வகுப்பு படிக்கும்போது பெயின்ட், எம்.எஸ்.ஆபீஸ், பவர் பாயின்ட் கத்துக்கொடுத்தார். ரெண்டு பேருக்குமே படம் வரையிறதுல ஆர்வம் உண்டு. படம் வரைஞ்சு பவர் பாய்ன்ட்ல செட் பண்ணி விளையாடுவோம். அப்பா எங்களை என்கரேஜ் பண்ணி கத்துக்கொடுத்ததோட, எங்களுக்குன்னே ஒரு கம்ப்யூட்டரும் வாங்கிக்கொடுத்தார்’’ - முதிர்ச்சியான மொழியில் பேசுகிறார் ஷ்ரவன்.

பிள்ளைகளின் ஆர்வத்தைக் கண்ட குமரன், சின்னச் சின்ன அப்ளிகேஷன்களோடு லோகோ, பேசிக் போன்ற கணினி மொழிகளையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். தந்தை போட்ட கோட்டில் பிள்ளைகள் ரோடு போட்டுவிட்டார்கள்.

‘‘அப்பா சாம்சங் கேலக்ஸி மொபைல் வச்சிருந்தார். அவர் வந்தவுடனே மொபைலை எடுத்து கேம்ஸ் விளையாடுவோம். அப்ளிகேஷனை நோண்டுவோம். அதில எங்க ரெண்டு பேருக்குள்ள போட்டியே வரும். இதைக் கவனிச்ச அப்பா, ‘கேம்ஸ் விளையாடுறது பெரிய விஷயமில்லை. கேம்ஸை நீங்களே உருவாக்க முயற்சி பண்ணுங்க’ன்னு சொன்னார். நிறைய புத்தகங்களும் வாங்கிக் கொடுத்தார். ரூபி கன்வெர்ஷன், டைம் கன்வெர்ஷன்னு நூறுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள். ஆனா, எல்லாமே சாதாரணமா இருந்துச்சு. பெரிசா ஒரு கேம் எழுதணும்னு திட்டமிட்டோம். தகுந்த மாதிரி சம்மர் லீவ் வந்துச்சு. என்ன கேம் எழுதலாம்னு யோசிச்சப்போ, ‘சின்ன வயசுல நாம விளையாண்ட திருடன் போலீஸ் கேமையே எழுதலாம்Õனு அண்ணன் சொன்னான். அதுக்கு Ôகேட்ச் மீ காப்Õனு பேரு வச்சோம். இந்த கேமை இன்டர்நெட்ல அப்லோடு பண்ணினோம். 3 மாசத்துல 43 நாடுகள்ல இருந்து 20 ஆயிரம் பேர் டவுன்லோடு பண்ணினாங்க...’’ என்று விழி விரியப் பேசுகிறார் சஞ்சய்.
‘‘மொபைல்னா எங்க வயசு பிள்ளைகளுக்கு கேம்ஸ்தான் நினைவுக்கு வரும். அதையே Ôஎஜுகேஷன் டிவைஸாÕ மாத்தணும்னு யோசிச்சோம். ஒரு Ôஅல்பபேடிக் போர்டுÕ உருவாக்குனோம். ÔகிÕங்கற எழுத்துல கை வச்சா ஒரு ஆப்பிள் வரும். Ôஏ பார் ஆப்பிள்Õனு குரலும் வரும். இதுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ்.

ஒருமுறை குடும்பத்தோட ஃபிளைட்ல போய்க்கிட்டிருந்தோம். விமானத்தில சின்னக் கோளாறு. ‘ஒண்ணும் ஆகிடக்கூடாதுன்னு கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க’ன்னு அம்மா சொன்னாங்க. ஃபிளைட்ல கடவுள் படமே கிடைக்கலே. அந்த அனுபவத்துல ‘பிரேயர் பிளானெட்’ உருவாக்குனோம். அந்த அப்ளிகேஷனை ஓபன் பண்ணினா, எல்லா மதங்களோட கடவுளும், பின்னணியில அந்தந்த மதத்துக்குரிய  பாடலும் ஒலிக்கும். இந்த புராடக்டை எல்லாம் மார்க்கெட் பண்றது எப்படின்னு யோசிச்சப்பதான், ‘நீங்களே ஒரு கம்பெனியை ஆரம்பிங்களேன்’னு அப்பா சொன்னார். அவரோட வழிகாட்டுதல்படி ‘கோ-டைமன்ஷன்’ நிறுவனத்தை தொடங்குனோம்’’ என்கிறார் ஷ்ரவன்.

முதியோர்களுக்காக இவர்கள் உருவாக்கியுள்ள ‘எமர்ஜென்சி பூத்’ என்ற அப்ளிகேஷன் முக்கியமானது. அதை ஓபன் செய்தால், போலீஸ், ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை எண்கள் ஒளிரும். அதில் கை வைத்தால் போதும். உடனடியாக கால் போகும். இது தவிர, 3 உறவினர்களின் எண்களையும் பதிவு செய்து வைக்கும் வசதி உண்டு. அவர்களுக்கு தானாகவே ‘எமர்ஜென்சி’ என்று எஸ்.எம்.எஸ் போய்விடும். வயதானவர்களுக்கு உற்ற துணைவனாக இருக்கும் இந்த அப்ளிகேஷனை உலகம் முழுவதும் பயன்படுத்தும் வகையில், அந்தந்த நாடுகளுக்குஉரிய அவசர உதவி எண்களோடு அப்டேட் செய்திருக்கிறார்கள். இந்த சகோதரர்களின் கனவு, ‘கிராமத்து விளையாட்டுகள் அனைத்தையும் மொபைலுக்கும் கம்ப்யூட்டருக்கும் கொண்டு வர வேண்டும்’ என்பதே.
மொபைல் அப்ளிகேஷன் தொடர்பாக ஏற்படும் சந்தேகங் களை தன் பிள்ளைகளிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்கிறாராம் குமரன் சுரேந்திரன். இதைவிட ஒரு தந்தைக்கு வேறென்ன பெருமை வேண்டும்..?
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்