தன்னம்பிக்கை பவர்!





கிராமங்களில் விவசாயம் அழிந்து வருவதை பொங்கல் சிறப்பிதழ் கவிதைகள் இரண்டும் ‘ஆணி அடித்தாற் போல’ உணர்த்தின. பாராட்டுக்கள்!
- எஸ்.சாந்தி, காட்பாடி; ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

‘மனதை வருடும் மயிலாடி கற்சிலைகள்!’ கட்டுரை, தமிழ்நாட்டு சிற்பக் கலையின் மேன்மையை உலகறியச் சொல்லிவிட்டது. இன்றும் அவற்றைக் காப்பாற்றி வைத்திருக்கும் மயிலாடி கிராமத்தினருக்கு நாம் அனைவருமே கடமைப்பட்டுள்ளோம்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவை லைவ் ரிலே போலத் தொகுத்தளித்து பரவசமூட்டி விட்டீர்கள். சரியான தேர்வும் நிறைவான நிகழ்ச்சியும் ‘சன் குடும்பம், என் குடும்பம்’ என எண்ண வைத்தது!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

‘கட்டைக் கால்’ தவில் வித்துவான் மாரிமுத்துவின் புதிய முயற்சியையும் திறமையையும் பாராட்டி ‘குங்குமம்’ கட்டுரை வெளியிட்டிருப்பதே அவருக்கு ஒரு சிறப்பு அங்கீகாரம்தான். கிடைக்கப் போகும் அங்கீகாரங்களுக்கு இது தொடக்கம் எனலாமே!
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்., பி.ஆர்.மயிலப்பன், ஈரோடு.

‘வாழ்க்கையின் முதல் அன்னியமாதல் கண்ணாடி பார்ப்பதிலிருந்து தொடங்குகிறது’ என்ற வைர வரிகள் தத்ரூபமாகவும், யதார்த்தமாகவும் இருந்தது. மொத்தத்தில் பொங்கல் போனஸாக மனுஷ்ய புத்திரன் கடந்த இதழில் பின்னியெடுத்துவிட்டார்.- இராம.கண்ணன், திருநெல்வேலி.

அட்டையில் விக்ரம் ஸ்டில் ‘தில்’லாக ‘தூள்’ கிளம்புவது போன்று இருந்தது. நடிப்பில் ‘கிங்’காகவும் பலருக்கு ‘பிதாமக’னாகவும் இருக்கும் விக்ரம், ‘டேவிட்’டாக வரும் நாளை விரைவில் எதிர்பார்க்கிறோம்!
- வி.சி.கீதா, பெங்களூரு.

‘ச்சீய் பக்கங்கள்’ பகுதியில் ‘ரேப்’ பற்றிப் படிக்க திகிலாகவும், திகைப்பாகவும் இருந்தது. டெல்லி மருத்துவ மாணவியின் துயரமும் மனதுக்குள் நிழலாடியது.
- டி.வி.ரமா, செங்கல்பட்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினி என்றுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் கொடை வள்ளலும் கூட என்று கலைஞானத்தின் வார்த்தைகள் ஊர்ஜிதம் செய்துவிட்டன. சூப்பர் ஸ்டார் ஆகும் முன்னமே அந்த மனிதருக்குள் இருந்த அந்த கம்பீரம்... பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது!
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

எல்லோருக்கும் சிறந்த ‘நக்கல்’ பட்டங்களை வழங்கிய ஆல்தோட்ட பூபதியை ‘நக்கல் நங்கூரம்’ என்ற பட்டத்தை நாம் வழங்கி சிறப்பிப்
போமாக!
- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்; ரேவதிப்ரியன், ஈரோடு.

அட்டையில்: ஹன்சிகா
ஸ்பெஷல் படம்: கார்த்திக் ஸ்ரீநிவாசன்
நன்றி: சென்னை சில்க்ஸ்