தத்துவம் மச்சி தத்துவம்




என்னய்யா... பொதுக்கூட்டத்துக்கு வட மாநிலத்து ஆளுங்களா வந்திருக்காங்க..?’’
‘‘மொழி புரியாம இருக்கற இவங்கதான், நாம சொன்ன இடத்துல எல்லாம் கை தட்டுவாங்க தலைவரே..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

எவ்வளவு பிரபலமான பாடகராக இருந்தாலும், அவரும் சாதாரண தட்டுலதான் சாப்பிடணும்; இசைத்தட்டுல எல்லாம் அவரால சாப்பிட முடியாது.
- இசைத்தட்டில் பாடலை ஓடவிட்டு, மண் சட்டியில் கூழ் சாப்பிடுவோர் சங்கம்
- அ.முருகானந்தம், மதுரை.

என்ன இருந்தாலும் தலைவர் செய்யறது கொஞ்சம்
கூட நல்லா இல்லே...’’
‘‘ஏன்... என்ன செய்யறார்?’’
‘‘மேடையிலே பேசறப்போ அவர் மேலே வந்து விழுந்த செருப்புகளை எல்லாம் சேர்த்து வச்சு ‘காலணி கண்காட்சி’ நடத்தப் போறாராம்!’’
- மு.மதிவாணன், அரூர்.

ஒரு காலத்துல தலைவர் பேர் ‘ஈகோ’வால ரொம்ப
கெட்டுச்சு...’’
‘‘இப்போ..?’’
‘‘இ.பி.கோவால கெடுது..!’’
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

ரேஸ் குதிரை மேல பணம் கட்டி விளையாடலாம். கற்பனைக் குதிரை மேல பணம் கட்ட முடியுமா?
- ரேஸ் விளையாட்டில் கிரேஸ் கொண்டு கற்பனைக் குதிரையைத் தட்டி விடுவோர் சங்கம்.
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

வக்கீல்கள்ல சிவில் லாயர் இருக்காங்க; கிரிமினல் லாயர் இருக்காங்க.
எஞ்சினியர்ல சிவில் எஞ்சினியர் இருக்கிற மாதிரி, கிரிமினல் எஞ்சினியர் இருக்கிறாங்களா..?
- கொலைவெறியோடு கொஸ்டீன் கேட்போர் சங்கம்
- காயத்ரி, மதுரை.

கபாலி வீட்டுக்குப் போற சாலையை சீல் வச்சு கடும் பாதுகாப்பு போட்டுட்டாங்களாமே... ஏன் ஏட்டய்யா?’’
‘‘கண்டவங்களும் போய் மாமூல் கேட்டு டார்ச்சர் பண்றாங்களாம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.