தத்துவம் மச்சி தத்துவம்





‘‘மக்களுக்கு தாங்கும் சக்தி இப்ப அதிகமாகியிருக்குன்னு தலைவர் சொல்றாரே... ஏன்?’’
‘‘அவர் மீட்டிங்கை ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்து கேட்கறாங்களே... அதை வச்சு சொல்றார்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

என்னதான் டாஸ்மாக் கடையிலே வேலை பார்க்கறவரா இருந்தாலும், வீட்டுக்கு வந்தவங்களை ‘‘என்ன சாப்பிடுறீங்க... காபியா? டீயா?’’ன்னு கேட்பாரே தவிர, ‘‘விஸ்கியா... பிராந்தியா..?’’ன்னு கேட்க மாட்டார்.
- தத்துவத்தில் ‘பட்டையை’க் கிளப்புவோர் சங்கம்
- பாளை பசும்பொன், நெல்லை.

‘‘எல்லா நாட்டு மன்னர்களையும் ஏன் ஒரே சமயத்தில் போருக்கு வரச் சொன்னீர் மன்னா..?’’
‘‘வயதாகிவிட்டது அல்லவா... ஒவ்வொருவர் துரத்தும்போதும் தனித்தனியாக ஓட முடிவதில்லை அமைச்சரே..!’’
- நா.கி.பிரசாத், கோவை.

‘‘போருக்கு நான் வாள், கேடயம், கவசம் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை...’’
‘‘ஏன் மன்னா..?’’
‘‘அவைகள் எல்லாம் இருந்தால் ‘அன் ஈசி’யாக இருக்கும்; ‘ரன் ஈசி’யாக இருக்காது..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

கீரைல போட்ட அதைக் கீரை வடைன்னு சொல்றோம், மசால்ல போட்டா அதை மசால் வடைன்னு சொல்றோம். ஆனா மெதுவா போடுற வடையை ‘மெதுவடை’ன்னு சொல்ல முடியுமா?
- கடையேறி வடை திருடுவோர் சங்கம்
- எஸ்.பூவேந்தரசு, கம்பைநல்லூர்.

‘‘நீங்க பத்து நிமிஷம் வெளியே இருங்க... பேஷன்ட்டை தனியா பரிசோதிக்கணும்...’’
‘‘அதுக்கு அவசியமில்லை டாக்டர்... அவரோட பர்ஸ் என்கிட்ட தான் இருக்கு..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

என்னதான் ஒரு தயாரிப்பாளர் பக்கா ‘மசாலா’வா படம் தயார் பண்ணினாலும், அது மட்டன் மசாலாவா, சிக்கன் மசாலாவா, மீன் மசாலாவான்னு சொல்ல முடியாது!
- மசாலா போட்டு குஜாலா சமைப்போர் சங்கம்.
- பெ.பாண்டியன், காரைக்குடி.