அல்பம் அலமேலு

 ‘‘நம்ம பையன் ஸ்கூல்ல எல்.கே.ஜி. காலத்திலேர்ந்து வாங்கின மெடல்கள்தாங்க! ஒலிம்பிக் சீஸன் ஆச்சே... பந்தாவா இருக்கட்டும்னு, தேடி எடுத்து தொங்க விட்டிருக்கேன்!’’

 ‘‘நம்ம பையன் ஸ்கூல்ல எல்.கே.ஜி. காலத்திலேர்ந்து வாங்கின மெடல்கள்தாங்க! ஒலிம்பிக் சீஸன் ஆச்சே... பந்தாவா இருக்கட்டும்னு, தேடி எடுத்து தொங்க விட்டிருக்கேன்!’’

 ‘‘என்ன மாமி நீங்க... கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசாங்கமே 500 ரூபா, 1000 ரூபாவ செல்லாதுன்னு அறிவிக்கப் போகுதாமே! இப்ப போயி, போன மாசம் வாங்கின ஆயிரம் ரூபாவ திரும்பக் கேக்கறீங்க..?’’

‘‘கத்தாதீங்க... கால்ல சுளுக்கெல்லாம் ஒண்ணுமில்ல! அப்படிச் சொன்னாதான் மொட்டை மாடியில காயற நம்ம துணிகளையும் அவங்க எடுத்திட்டு வருவாங்க...’’

‘‘உஷ்... சத்தம் போடாதீங்க! முழிச்சிட்டுதான் இருக்கேன். ஏர் பில்லோ கடன் கொடுத்த மேல் பெர்த் அம்மா போகட்டும். பில்லோவையும் சுருட்டிட்டு போயிடலாம்!’’

‘‘பையன் ஸ்வீட் கேட்டு அழுதா, ஏன் கடைக்குப் போறீங்க? பக்கத்து வீட்ல திருப்பதி போயிட்டு வந்திருக்காங்க.   எப்படியும் லட்டு தருவாங்க... குடுத்து சமாளிச்சுக்கலாம்!’’