வலைப்பேச்சு





குழந்தைகளுக்கு லீவு விட்டாச்சு. மம்மீஸ் அண்டு டாடீஸ்! நீங்க ஏன் அவங்கள மத்த மாநிலத்துக்கு எல்லாம் சுற்றுலா கூட்டிக்கிட்டுப் போயி கரன்ட்டுன்னா என்னன்னு காட்டக்கூடாது?

# கொழந்தப்புள்ளைங்க
மறந்துடக்கூடாதுல்ல...
அதான் சொன்னேன்!
- யோ பாஷி

இந்தியாவில் நீதியும் தண்டனைகளும், அவரவர் வைத்திருக்கும் காந்தி தாத்தா படம் போட்ட காகிதத்தின் மதிப்பைப் பொறுத்தே நிர்ணயம் ஆகிறது.
# ஃபேக்ட்டு ஃபேக்ட்டு
ஃபேக்ட்டு ஃபேக்ட்டு
- நிர்மல் குமார்

படி ஏறும்போது மேல போக எவ்ளோ கஷ்டப்படுறோம்; கீழ இறங்கி வரும்போது சர்ருன்னு எறங்கிடறோம்...
# இதுக்குப் பேர்தான் வாழ்க்கை!
- கிருஷ்ணா கிட்டு

மனப்பிறழ்வின் பேரின்பத்தை சில காலத்துக்கு தந்து செல்கிறார்கள் காதலிகள்.
# பைத்தியம் பிடிச்சி திரிஞ்சத
இப்டியும் நாசூக்கா
சொல்லலாம்வே!!!
- மதன் செந்தில்

புளிக்குழம்பை தோசைக்குத் தொட்டுக்கொள்ள வைப்பதை பெண்கள் எப்போது நிறுத்துகிறார்களோ, அப்போதுதான் இந்தியா வல்லரசாகும்!
# தி புளிக்குழம்பு நெவர் ராக்ஸ்
- டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

நம்மூர்ல ஸ்கூல் படிக்கற பிள்ளைகளோட வருங்காலத்துக்கு அவங்க அப்பாம்மா மூணே மூணு ஆப்ஷனத்தான் குடுக்கறாய்ங்க...
ஆப்ஷன் ஏ: எஞ்சினியர் ஆவணும்
ஆப்ஷன் பி: டாக்டர் ஆவணும்
ஆப்ஷன் சி: தூக்கு
மாட்டிக்கிட்டு சாவணும்
- அதிஷா வினோ

நுணுக்கங்களோடு அழகாய் இருக்கிறது சிலந்தி வலை.
எப்பொழுதும் சிக்கிக் கொள்
கின்றன பூச்சிகள்.
- பி.ஜி.சரவணன்


@iParisal
ஆம்புலன்சின் தலையில் கேட்கும் ஒலி, உள்ளே இருப்பவரின் உறவினர்களின் கதறல்.

@Thanjaikarthik
நம்மைச் சுற்றி நடக்கும் நாடகங்களைப் புரிந்து கொண்டால் நாம் ஹீரோ... இல்லை என்றால் நாம் ஜீரோ  !

@thoatta
பாமை செயலிழக்க ஆண்கள் காட்டும் வேகத்தைவிட, அடுப்பில் பால் பொங்குவதை நிறுத்த பெண்கள்   காட்டும் வேகம் அபரிமிதமானது!

@Tottodaing
தமிழகத்தில் மட்டுமே புகார் தருபவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள்   உள்ளன: முதல்வர்
# பாய், தலையணையும் கொடுங்க, தீர்ப்பு வரும்வரை ரெஸ்ட் எடுக்கட்டும்!

@tamizachi
பணம் பேசும் இடங்களில் மனிதர்களின் பேச்சு எடுபடுவதில்லை!

@erode_kathir
ஒவ்வொருவர் மனதும் ஒரு தனி உலகம்.

@riyazdentist
  குரங்கு மரம் விட்டு மரம் தாவும்; மனம் விட்டு மனம் தாவாது.

@Balu_SV
அவரவர் அறிவிற்கான நிஜ சான்றாக இருக்காததே, இந்திய கல்வி சான்றிதழ்களின் தனிச்சிறப்பு...

@iyyanars
20 கோடி ஆண்டுகளாக அழியாத ஒரு உயிரினத்தை, அசால்ட்டாக செருப்பில் அடித்து சாகடித்து விடுகிறான் மனிதன்.
# கரப்பான் பூச்சி!

@vandavaalam
மத்திய அரசு
மட்டுமல்ல, தெலுங்கு நடிகைகளும் மாநிலத்திற்கு மாநிலம் பாரபட்சத்துடன்   நடந்துகொள்கின்றனர்:))
# அனுஷ்கா, தமன்னா

@CrazyGanevh 
பி.எஸ்.என்.எல்.   டேப்லட் தெரியுமாடான்னு   கேட்டா, ‘அது என்ன டேப்லட் மச்சி... பன்றிக் காய்ச்சலுக்கு கவர்மென்ட் கொடுக்குதா’ன்னு கேட்குறான் ஒருத்தன்.

@kaattuvaasi
ஒருசில பெண்களை அண்ணாந்து பார்க்க நேர்கையில்தான் யோசிக்கிறேன்...
# காம்ப்ளானை அப்படியே
சாப்பிட்டிருக்கலாம்  !
 
@vandavaalam
காதலிக்காக காத்திருந்து வாட்சை பார்ப்பதை விட, கரன்ட்டுக்காக காத்திருந்து வாட்ச் பார்ப்பதுதான் அதிகரித்துள்ளது!

@g_for_Guru 
  யாரிடமும் கேட்க முடியாத பல ரகசிய வரங்களை எல்லாரும் வைத்திருக்கிறோம்...

@iLoosu 
வெட்கப்பட்டு வந்தால் அது காதல், வெட்கத்தை விட்டு வந்தால் அது கள்ளக் காதல்.

@Pethusamy
அமெரிக்காவில் நாய்களுக்காக தனி டிவி சேனல் துவக்கம் - செய்தி
# அதுங்க மட்டும்தான்
நிம்மதியா
இருந்துச்சிங்க. இப்போ அதுவும் போச்சா...

@kaattuvaasi 
தமிழக வீதிகள் தார் பாலைவனம் போலக் கொதிக்
கின்றன...
# இப்பவே நல்லதா ரெண்டு
ஒட்டகம் வாங்கி வச்சுக்கணும்;
வருங்காலத்துல டிமாண்ட் வந்துடும்...

@RenugaRain
எட்டு ராசியில்லைங்கறாங்க, ஆனா பாருங்க ஒரு பவுன் எட்டு கிராம். அதுக்கில்லாத ராசியா??
   # யோசிங்க
 
@NforNeil   
மிங்கிள் ஆனவனுக்கு ஒரே லவ்வர்; சிங்கிளா இருக்கிறவனுக்கு ஊரெல்லாம் லவ்வர்!

@gpradeesh
பெற்றோர்கள் மாணவர்கள் மேல் சுமத்தும் சுமை, தீராத சுமைகளாய்   திரும்ப அவர்களுக்கே வருகிறது
# தற்கொலைகள்.

@thoatta 
சச்சினுக்கு ஒரு வயதைக்
கூட்டுவதை, காலம் கூட
கவலையுடனே செய்கிறது!

@RealBeenu
  திருமணம் முடிந்த கையோடு கோலிவுட் திரும்பும் ரீமா சென் விஜய் படத்தில் நடிக்கிறார்.
# வந்தாரை வாழ
வைக்கும் தமிழகம்!