அகேரளக் கரையில் மீனவர்கள் இருவரை இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் சுட்ட
விவகாரம் சீக்கிரம் நீர்த்துப் போகக்கூடும். சுட்டவர்களின்
குடும்பத்தினரும், கப்பல் நிறுவன அதிகாரிகளும் கேரளா வந்து, இறந்த
மீனவர்களின் குடும்பத்தோடு தனிப்பட்ட முறையில் டீல் போட்டுவிட்டார்கள்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுத்ததால், வழக்கில்
அவர்கள் இனி தீவிரம் காட்ட மாட்டார்கள். சீக்கிரமே அந்த வீரர்கள்
ஜாமீனில் வெளிவரக்கூடும். அதென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா இன்னும் ஒருமுறை திருமணம்
செய்துகொண்டிருக்கிறார். 70 வயதாகும் ஜுமாவுக்கு இது ஆறாவது திருமணம். அதிபரான பிறகு அவர் இரண்டாவது முறை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். போங்கி கெமா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்ட நிகழ்விற்கு, அவரோடு
இப்போது இருக்கும் மூன்று மனைவியரும் வந்திருந்தனர்.
புதுமணத் தம்பதிக்கு 7
வயதில் ஒரு குழந்தை ஏற்கனவே இருக்கிறது. அமலையாள தயாரிப்பாளர் அப்பச்சன் மரணம், தென்னிந்திய சினிமா ரசிகர்களை
சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தியாவின் முதல் 3டி படமான ‘மை டியர்
குட்டிச்சாத்தான்’ அவரது படைப்பு.
தென்னிந்தியாவின் முதல் சினிமாஸ்கோப்
படமான ‘தச்சோளி அம்பு’, முதல் 70 எம்.எம். படமான ‘படயோட்டம்’ இரண்டையும்
உருவாக்கிய பெருமைக்குரியவர். மோகன்லால் இவரது அறிமுகம்தான். ‘மஞ்ஞில்
விரிஞ்ச பூக்கள்’ படத்தில் மோகன்லாலை முதன் முதலில் ஷூட் செய்த கேமராவை,
கடந்த மாதம்தான் லாலிடம் பரிசாகக் கொடுத்தார் அப்பச்சன். அது மோகன்லாலின்
பர்சனல் கலெக்ஷனில் பத்திரமாக இருக்கிறது.
அகன்னடத்தில் இதுவரை எந்த நடிகையும் வாங்காத சம்பளம் சமீரா ரெட்டிக்கு
கிடைத்திருக்கிறது. சுதீப் ஜோடியாக அவர் நடிக்கும் ‘வரதநாயகா’
படத்துக்குத்தான் இந்த பேமென்ட். எவ்வளவு என்பதை வெளியில் சொல்ல
மறுக்கிறார் சமீரா.
ஆனாலும் இந்தப் பெருமைக்கு தான் தகுதியானவள் என்கிறார். அஎலிசபெத் டெய்லர் வாழ்க்கைக் கதை படமாகிறது. நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனோடு
அவருக்கு இருந்த ரொமான்டிக் உறவைப் படமாக எடுக்கிறார்கள். எலிசபெத்
டெய்லராக நடிப்பவர், போதை சர்ச்சைகளால் வழக்குகளில் சிக்கிய நடிகை
லிண்ட்ஸே லோகன்.