சுவாமி ஜாலியானந்தா





என்ன பண்ணுவீங்களோதெரியாது... என் பழைய தாடி, மீசை மாதிரியே அர்ஜென்டா செஞ்சு குடுங்க. எந்த தறுதலையோ நேத்து ‘ஃபேஷியல் க்ரீம்’னு சொல்லி ‘ஹேர் ரிமூவிங்’ க்ரீமைக் கொடுத்துட்டான்!

இன்கம்டாக்ஸ் கட்டறது சம்பந்தமா டிஸ்கஸ் பண்றப்ப, ஆடிட்டர் பொண்ணுகிட்ட வாலாட்டியிருக்காரு... அவ இவரு முதுகுல டின்னைக் கட்டியிருக்கா டாக்டர்!

ஹையா... ட்ரீட் கொடுங்க குருஜி! சுப்ரீம் கோர்ட்ல அப்பீல் பண்ண உங்க தூக்கு தண்டனை கேச குறைச்சு, மூணு ஆயுள் தண்டனையா தீர்ப்பாகி இருக்கு!

டென்ஷன் ஆகாம
என்ன பண்ணச் சொல்றீங்க? ஷேர் மார்க்கெட் நிலவரம் பார்றான்னா, இரும்பு சேரா, பிளாஸ்டிக் சேரான்னு கேக்கறான்..!

டேய் சிஷ்யா!
நல்லா தெரியுமாடா... இது அக்குபங்ச்சர் ஊசிதானா?