‘கழுகு’ன்னு பேர் வச்ச நேரம்... அந்த செட் ரிலீஸ்ல உயரத்துக்குப் போன படம் அதுதான். ரிலீஸுக்கு 238 தியேட்டர்கள் போட்டு, வெற்றிக்குப் பிறகு எக்ஸ்ட்ரா தியேட்டர்கள்ல படம் ஓட, காத்தடிக்கிற திசையில ஓடி வர்ற தயாரிப்பாளர்கள் இப்ப கிருஷ்ணா ஆபீஸ் பக்கம் வளைய வர்றாங்க. ‘‘ரெண்டு படங்கள் சரியா போகாததுல மனசை எல்லாரும் ரொம்பவே நோகடிச்சாங்க. ‘என் அடுத்த படத்துல நீதான்’னு கண்டிப்பா சொன்ன நண்பர்கள்கூட, ‘ஸாரிடா மச்சான்... அடுத்த படத்துல பார்க்கலாம்...’னு ஒதுங்கினாங்க. நான் நடனம் ஆடிய ஒரு விழாவில எனக்கு டிரஸ் மாத்தக்கூட இடம் கொடுக்கலை. இப்ப நான், நீன்னு பக்கத்துல வர்றாங்க. ஆனா யார் மனசையும் புண்படுத்தற எண்ணம் எனக்கில்லை. வர்ற வாய்ப்புகளை ஒத்துக்கிட்டு அட்வான்ஸ்களை வாங்கிப் போட்டுக்காம, தோல்வியில கூட எனக்குத் தோள் கொடுத்து நின்ன என் நண்பர் பி.பாண்டியனுக்கு வெற்றியிலும் பங்கு கொடுக்க நினைச்சு, ‘நீங்க படம் எடுங்க. நான்தான் ஹீரோ...’ன்னு சொல்லிட்டேன்.
‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ டைரக்டர் ராஜ்மோகன்தான் டைரக்டர். டைட்டில் ‘வானவராயன் வல்லவராயன்’...’’னார் கிருஷ்ணா. ‘முரட்டுக் காளை’ டைட்டிலை இன்னொருத்தர் வச்சுட்டதாலா..?
சமீபத்துல சோனாவை பார்த்தப்ப ஆச்சரியம்! ‘‘அக்கா வரலியா..?’’ன்னு கேக்க வைக்கிற அளவுக்கு ஸ்லிம்மா இருந்த சோனா, அதவிட இளைச்ச டிரஸ்ல இருந்துச்சு. அது சிட்னி ஸ்லேடனோட புண்ணியம். சோனாவோட பத்து மாடல்கள் சேர்ந்து ஒரு ஃபேஷன் பரேட் நடத்திய அந்த நிகழ்ச்சி, சோனாவோட யுனிக் ஃபர்னிச்சர்களை அறிமுகப்படுத்தவாம். ‘‘ஆஸ்திரேலியாவில நடக்கிற ‘ஃபேஷன் வீக்’குக்கு எங்க யுனிக் ஃபர்னிச்சர்ஸ்தான் ஸ்பான்சர்ஸ். அதுக்கான ஆடைகளை சிட்னி ஸ்லேடன் டிசைன் பண்றார். அதையெல்லாம் அறிமுகப்படுத்த இந்த ஈவன்ட்’’ன்னுச்சு.
முழுக்க போர்த்திக்கிட்டு சேலையில ஒரு ஃபங்ஷனுக்கு போன வாரம் சோனா வந்தது நினைவுக்கு வர, ‘‘ஆமா... ‘இனி புடவைதான் கட்டப் போறேன்’னு ரெண்டு வருஷம் முன்னாடி சபதமெல்லாம் எடுத்து வார்ட்ரோப் நிறைய புடவைகளா அடுக்கி வச்சிருந்தீங்களே... அந்த சபதம் என்னாச்சு..?’’ன்னு கேட்டேன்.
‘‘அதை ஏம்பா கேக்கறே..? ஒரு மாசம் கஷ்டப்பட்டு புடவையை மட்டும்தான் கட்டினேன். ஆனா ஒரு கட்டத்துல அதை சுமக்கவும் முடியாம, ஃப்ரீயா புழங்கவும் முடியாம, வேஷ்டி மாதிரி டப்பா கட்டு கட்டிக்கிட்டு வேலை பார்க்க வேண்டியதாப் போச்சு... (ஜஸ்ட் இமேஜின் கய்ஸ்...) அதான் புடவையோட சபதத்தையும் கழற்றி வச்சுட்டேன்...’’ன்னுச்சு. ‘அன்று சபதங்களின் காரணமாக கோப்பைகளை உடைத்தேன்... இன்று கோப்பைகளின் காரணமாக சபதங்களை உடைக்கிறேன்...’ங்கிற குடிகாரப் பழமொழியை சோனா மொழியில சொன்னா, ‘புடவைகளின் காரணமாக சபதங்களை அவிழ்க்கிறேன்...’னுதான் சொல்லணும்.
‘கலகலப்பு’ ஆடியோ ரிலீஸ்ல பார்க்கிற இடமெல்லாம் அஞ்சலி, ஓவியான்னு கலகல பொண்ணுங்க வளைய வர, ரெண்டுல ஒரு ஹீரோவாகிற ஷிவா, செம சுதியில இருந்தார். இந்த சுதி காமெடியைத்தான் குறிக்கும். ‘‘இந்தப்படத்துல என்னோட கேரக்டரை வேற யாருமே நடிக்க முடியாது பாஸ்...’’ன்னவர் சுதி ஏறி மேலே போனார். ‘‘இதை நான் சொல்லலை. டைரக்டர் சுந்தர்.சியேதான் சொன்னார். ‘படத்துல எல்லா கேரக்டர்களுக்கும் ஆல்டர்நேட் இருந்தது ஷிவா. ஆனா உன் கேரக்டருக்கு உன்னை விட்டா வேற யார் முகமும் நினைவுக்கு வரலை’ன்னார். ‘சரி சார் தேங்க்ஸ்...’ன்னுட்டு கதை கேக்க உக்காந்தேன். ‘படத்துல நீ உதவாக்கரை. நீ கெடறது மட்டுமில்லாம கூட இருக்கிறவனையும் வெட்டியாக்கிடுவே...’ன்னு ஆரம்பிச்சு கதை சொன்னப்ப, ‘உன் கேரக்டருக்கு வேற ஆல்டர்நேட்டே தோணலை’ன்னு அவர் சொன்னதோட அர்த்தம் புரிஞ்சது..!’’
யூ டிஸர்வ்டு இட் ஷிவா!