புலிகேசியாகும் சந்தானம்!




இம்சை அரசன் புலிகேசியோட இரண்டாம் பாகம் தயாராகுது. முதல் பாகத்தை டைரக்ட் பண்ணிய அதே சிம்புதேவன்தான் இதையும் டைரக்ட் பண்றார். ஆனா புலிகேசியாகப் போறது
வடிவேலு இல்லை... சந்தானமாம். அவ்வ் வ்வ்வ்வ்வ்..!

தலயோட பிறந்த நாள் பரிசா மே முதல் தேதிக்கு ‘பில்லா 2’ ஆடியோ ரிலீசாக, இதே மாசம் படத்தையும் ரிலீஸ் பண்ணத் திட்டம் வச்சிருக்காங்க. செம ஹாட்டாயிடும் போலயே அக்னி நட்சத்திரம்..?


ஷங்கரோட படத்துக்கு விக்ரமா, சூர்யாவாங்கிற பிரச்னைக்கு ஒருவழியா முடிவு தெரிஞ்சுடுச்சு. அது விக்ரமேதான்... அதை ஆஸ்கர் பிலிம்ஸே தயாரிக்கிறதா நியூஸ் வர, அந்நியனுக்கு அந்நியனா அதுல  விக்ரமைப் பார்க்கலாம்.

விக்ரம் நடிக்கிற ‘தாண்டவம்’ படத்துல புது அட்ராக்ஷனா லக்ஷ்மி ராய்க்கு ஒரு கேரக்டர் கொடுத்திருக்கார் டைரக்டர் விஜய். ஜூன் வரை லண்டன்ல போய்க்கிட்டிருக்க ஷூட்டிங்ல கலந்துக்க கிளம்புது  லக்ஷ்மி ராய்...


இப்போதைக்கு ‘வட சென்னை’ படத்தைத் தள்ளி வச்சுட்டு இன்னொரு படத்தை ஆரம்பிக்க இருக்கார் டைரக்டர் வெற்றி மாறன். இதுல ஹீரோவாகப் போறது தனுஷேதான். தனுஷோட ஹேட்ரிக்  அடிக்காம விட மாட்டாரோ வெற்றி..?

நமீதா இல்லாம... ஆனா நமீதா நினைப்பு வர்றது போல டைட்டில் வச்சுப் படமெடுக்கிறார் ஷக்தி சிதம்பரம். ‘மச்சான்’ங்கிற அந்தப் படத்துல ரமேஷ் அரவிந்த், கருணாஸ், விவேக்கோட தானும்  நடிகராகிறார் அவர். காமெடி மச்சான்..!

விஜயவாஹினி நாகிரெட்டியோட நூற்றாண்டு விழாவுக்காக இந்த வருஷத்துலேர்ந்து சிறந்த ஜனரஞ்சகப் படத்துக்கான விருது தர்றாங்க. இந்த வருஷம் நாகி ரெட்டி விருது வாங்குது ‘கோ’. விருதோட  ஊக்கத் தொகையா ஒன்றரை லட்சம் ரூபாயும் கிடைக்கும்ங்கிறது ஹைலைட்..!
தன் மூத்த மகள் ஜனனியின் திருமணப் பத்திரிகையோட ஒரு ஆடியோ சிடியும் அனுப்பியிருந்தார் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார். அதுல அவர் குடும்ப உறுப்பினர்கள் எல்லாருமே கல்யாணத்துக்கு நம்மை  வரவேற்கிறாங்க. வரவேற்பிலும் புதுமை பண்றது கே.எஸ்.ஆர் ஸ்டைல்...

‘என்னமோ பிடிச்சிருக்கு’, ‘எழுதியது யாரடி’ புரட்யூசர் ஸ்ரீகந்தராஜா ‘சிக்கி முக்கி’ மூலமா டைரக்டராகிறது விசேஷமில்லை. நார்வேகாரரான அவர் படத்தை சென்னைக்காரர் ஆர்.செந்தில்குமார் புரட்யூஸ் பண்றதுதான் நியூஸ். டைட்டில் போலவே காதல்ல பத்திக்கிற படமாம்.
- கோலிவுட் கோயிந்து

சைலன்ஸ்

சமீபத்துல காமெடி தூக்கலா உள்ள படங்கள் சக்கைப் போடு போடவே, காமெடியா அறிமுகமான ரெண்டு ‘சி’ நடிகர்களுக்குள்ள இப்ப போட்டா போட்டி. காலெழுத்து உள்ளவர் கமிட் பண்ற  கம்பெனிக்கெல்லாம் ரகசியத் தூது விட்டு, முன்னவரை விட குறைவான சம்பளத்துக்கு ஒத்துக்கிறாராம் பின்னவர். அப்படி சமீபத்துல ‘ஜீ’ ஹீரோவாகிற ஒரு படத்தைப் பிடிச்சிருக்கார் சின்னவர். சிவ...  சிவா..!

படம் ‘ஓகோ ஓகோ’ன்னு ஓடினாலும் வரி விலக்கு இல்லாததால கணிசமான லாபத்தைப் பெற முடியாம ஹீரோ - புரட்யூசர் போராடிக்கிட்டிருக்க, படத்தோட இசையமைப்பாளர் மட்டும் படத்தோட  வெற்றிக்கு ஸோலோவா பொறுப்பேத்துக்கிட்டு பேமென்ட்டை உயர்த்திட்டாராம். அவங்கவங்க பிரச்னை அவங்கவங்களுக்கு..!