தத்துவம் மச்சி தத்துவம்
‘‘சாரி... போதையில் இருக்கும்போது உங்களுக்கு ஆபரேஷன் பண்ண முடியாது!’’ ‘‘நான் குடிக்கவே இல்லையே, டாக்டர்!’’ ‘‘நான் என்னைப் பற்றிச் சொன்னேன்...’’ - க.கலைவாணன், நகரி.
இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலை... பார்த்ததும் ‘ஐ லவ் யூ’ சொன்னா, ‘என்னைப் பத்தி உனக்கென்ன தெரியும்... அதுக்குள்ளே ஐ லவ் யூ சொல்றே’ங்கறாங்க; பார்த்துப் பழகிய பிறகு ‘காதலிக்கிறேன்’னு சொன்னா, ‘ஃப்ரண்ட்ஷிப்பை கொச்சைப்படுத்தாதே’ங்கறாங்க. அப்ப நாங்க எப்பதான் காதலிக்கிறது? - காதலிப்பதற்கு முன்பே தேவதாஸ் ஆனோர் சங்கம் - பிரியதர்ஷன், சேலம்.
‘‘ஆனாலும் தலைவர் அநியாயத்துக்குப் பொய் சொல்றாரு...’’ ‘‘ஏன்... என்ன சொன்னார்?’’ ‘‘அவரோட கையெழுத்தைப் போலவே, அவர் கைநாட்டும் கிறுக்கலா இருக்கும்னு சொல்றாரே!’’ - ஏ.நாகராஜன், சென்னை-75.
‘‘டாக்டருக்குத்தான் ஆபரேஷன் எதுவும் இல்லையே... அப்புறம் எதுக்கு அவசரமா ஒரு பாட்டில் ரத்தம் கேட்கறாரு..?’’ ‘‘அவரு ரத்தத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சாம்... அதான்!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
என்னதான் உங்க ஆபீஸ்ல இருக்கிற ஃபைல்களையெல்லாம் நீங்க கயிறை வச்சு கட்டி வச்சாலும், அதை ‘கட்டுக்கோப்பான’ வேலைன்னு சொல்ல மாட்டாங்க! - வேலை செய்யும்போது ஓவர் டைம் போட்டு யோசிப்போர் சங்கம். - ஜி.தாரணி, அரசரடி.
ஆண் ஆக்டோபஸ் பெண் ஆக்டோபஸிடம் சொன்னது... ‘‘நான் உன் கை கை கை கை கை கை கை கை பிடிக்க வேண்டும்!’’ பெண் ஆக்டோபஸ் கத்தியது... ‘‘டேய், கைகள வச்சிக்கிட்டு சும்மா இருடா!’’ - சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.
‘‘நம்ம தலைவருக்கு டாக்டர் பட்டம் வாங்கணும்னு ஆசை வந்திடுச்சு...’’ ‘‘எதை வச்சி அப்படிச் சொல்றே?’’ ‘‘கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சணும்... ஸ்கேன் எடுக்கணும்... சலைன் ஏத்தணும்னு எல்லாம் பேசிக்கிட்டிருக்காரே!’’ - டி.சேகர், திருத்துறைப்பூண்டி.
|