என்னதான் குடத்தைத் திருடினவனா இருந்தாலும், அவனை ‘குற்றவாளி’ன்னுதான் சொல்ல முடியும்; ‘குற்றகுடம்’னு சொல்ல முடியாது.
- குடம் திருடியவர்களை அடையாள அணிவகுப்பு
நடத்தி கண்டுபிடிப்போர் சங்கம்
- அ.பேச்சியப்பன்,
ராஜபாளையம்.
‘‘அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘பியூனோட ஸ்டூலை எதுக்கு மேனேஜர் ரூமுக்குக் கொண்டு போறாங்க..?’’
‘‘அதில உட்கார்ந்தா பியூனுக்கு மட்டும்தான் தூக்கம் வருதா... இல்லே தனக்கும் வருமான்னு மேனேஜர் டெஸ்ட் பண்ணப் போறார்...’’
- என்.பர்வதவர்த்தினி,
சென்னை-75.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தை வச்சு, இருட்டுக்குள்ள ஒரு பொருளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். ஆனால், இருட்டைக் கண்டுபிடிக்க முடியுமா?
- மின்தடை நேரத்தில் பகீர் தத்துவம் சொல்லி, திகில் கிளப்புவோர் சங்கம்
- ப.உமா மகேஸ்வரி, நெய்வேலி.
‘‘நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரை எந்த மருந்துக் கடையிலயும் கிடைக்கலைன்னு சொன்னதுக்கு, ‘மருந்துக் கடையில இருந்த ஏதாவது ஒரு மாத்திரையை வாங்கிக்க வேண்டியது தானே’ன்னு கேக்கறாரு!’’
‘‘மேடையில கை தட்டற மெஷின் வச்சிருக்கீங்களே... ஏன் தலைவரே?’’
வீட்டுப் பத்திரத்தை வச்சு கடன் வாங்கலாம்; கடை பத்திரத்தை வச்சுக்கூட கடன் வாங்கலாம். ஆனா, பாராட்டு பத்திரத்தையெல்லாம் வச்சு கடன் வாங்க முடியுமா..?
- பாராட்டும்போது அல்பமாக கடன் கேட்போர் சங்கம்
- ஜி.தாரணி, அரசரடி.
‘‘இந்த ஏரியாவுல கொசுத் தொல்லை அதிகம்...’’
‘‘அதுக்காக கொசுவர்த்தி பத்த வச்சு தலைவருக்கு ஆரத்தி எடுக்கறது நல்லாவா இருக்கு..?’’
- க.கலைவாணன், நகரி.
‘‘வாங்கற காசுக்கு எவன்யா உண்மையா
கை தட்டறான்... அதான்!’’