ஆக்ஷன் தல!



Untitled Document



‘மௌனம் இவர்களின் மொழி’ படித்தபோது வரமே சாபமாகிப் போன உணர்வை அனுபவித்தேன். ஒரு கதவு மூடிக்கொள்ளும்போது இன்னொரு கதவு எங்காவது திறந்துகொள்ளும் என்பதுதான் உலக இயல்பாக இருக்கிறது. அப்படியே நடக்கும் என்று நம்புவோம்.
-  எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.


அடேயப்பா! ‘பில்லா-2’வில் புதுவித ஆக்ஷன் ஹீரோ அஜித்தை பார்க்கலாம் போலிருக்கே... அதிரடி ஆட்டம் எப்போன்னு ரசிகர்கள் ரொம்ப ஆவலா இருக்கோம் தல!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
  .



 
‘பொண்ணுக்குப் போற சடங்கு’ என்ற பெயரில் ஜவ்வாது மலையில் உள்ள சம்பிரதாயத்தை கலாசார சீரழிவு என்பதா? நவநாகரிகத்தின் முன்னேற்றம் என்பதா?
 
 
- மா.கணேசன், திருவாரூர்-1.


கலர்ஃபுல், டிஜிட்டல், மிக்ஸிங் என பார்த்துப் பார்த்து அலுத்துப்போன விழிகளுக்கு, அந்தக்கால ஸ்டைலில் கார்த்திக் ஸ்ரீனிவாசனின் கருப்பு-வெள்ளை புகைப்படங்களில் நம் நட்சத்திரங்களை பார்த்தபோது மனம் லயித்துப் போனது!
 
- பாரதி, சிதம்பரம்.
 

ஒவ்வொரு இதழிலும் புகழ்மிக்கவரின் பொன்மொழிகளை வெளியிடுவது வரவேற்கத்தக்கது. இந்த வாரம் மகாத்மாவின் பொன்மொழிகள் அனைத்தும் அருமை.
 
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.
 

உழைப்பும் உண்மையும் இருந்தால் வெற்றி வாழ்க்கையின் பக்கத்திலேயே குடி கொண்டிருக்கும் என்பதற்கு உதாரணம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் வேலுச்சாமி.
 
 
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.
 

ஏழை வாசகனுக்கு எட்டாத நூல்களின் விலை உயர்வையும், நூலாசிரியர்களின் அணுகுமுறைகளையும், சென்னை புத்தகக் காட்சி நிறைவடைந்த தருணத்தில் பழநிபாரதி எழுத்தில் பிரதிபலித்த விதம் அருமை!
 
- எம்.சம்பத், கரூர்.
 

‘கவிதைக்காரர்கள் வீதி’யில் சிதறிய கவிதைகள் ஏழும் சப்தஸ்வரமாக சங்கீதம் இசைக்கின்றன!
 
- ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.
 

‘மேதை’ விமர்சனத்தை விலாவாரியாகப் படித்தபோது மயில் ஆடுவதைப் பார்த்து வான்கோழி ஆடிய கதைதான் எங்களுக்கு ஞாபகம் வந்தது!
 
 
- பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.
 

வினோத ரச மஞ்சரியில் ‘அழகான ஆபத்து’ படித்துத் துடித்துப் போனேன். இப்படி எல்லாமே போலி மார்பகங்களா? சே... சே... என்ன கொடுமைய்யா இது... பெண்களே, ரொம்ப உஷாரா இருங்கள்!
 
 
- வே.முருகேசன், சென்னை-88.
 

சினிமா படத் தலைப்புகளில் வெளிவந்த ஒரு பக்கக் கதைகள் அனைத்தும் தூள் மச்சி!
 
- த.சத்தியநாராயணன், சென்னை-38.