மாற்றுக் கருத்து கொண்ட மகாத்மாவும் நேதாஜியும் கூட மனதார ஏற்றுக்கொண்ட நம் தேசிய கீதத்துக்கு 100 வயது என்பது மிகப்பெருமை. ரவீந்திரநாத் தாகூருக்கு அடிப்போம் ஒரு ராயல் சல்யூட்!
- ஆர்.சியாமளா, திண்டுக்கல்.
காமம் புதிரும் இல்லை; புனிதமும் இல்லை. அது மனித வாழ்வின் அங்கம். அது ஒளித்துப் பேச வேண்டிய அந்தரங்கமாகி விட்டது என டாக்டர் நாராயண ரெட்டி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை.
- கோ.கல்யாணசுந்தரம்,கோயம்புத்தூர்.
சின்னஞ்சிறுசுகள் வீடு கட்டி கல்யாணம் செய்து, பிள்ளை பெற்று விளையாடும். ஆப்ரிக்க மனிதரின் விண்வெளிக் கனவு சிறுகுழந்தைகளின் விளையாட்டை நினைவூட்டுவதாக அமைகிறது.
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்..
‘கோலங்கள்’ அபியாக இருந்து ‘முத்தாரம்’ ரஞ்சனியாக மாறியிருக்கும் தேவயானியின் பேட்டி அவரது முகம் போலவே பளிச்!
- வி.நிம்மி, சென்னை-65.
பழநிபாரதியின் ‘காற்றின் கையெழுத்’தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளைப் படித்தபின் தேனீர் அருந்தும்போதெல்லாம் ஒரு மெல்லிய சோகம் மனதுள் இழையோடுகிறது.
- ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.
யார் சொன்னது இந்தியா ஏழை நாடு என்று? இல்லவே இல்லை... தங்கத்திலும் வெள்ளியிலும் தோசைகள் சுடும் நாடு இது!
- பள்ளிபாளையம் ரஞ்சனிப்ரியன், ஈரோடு.
‘வலைப்பேச்சு’ பகுதியில் வாரா வாரம் நல்ல நல்ல சிந்தனைகள், நையாண்டி கலந்த தத்துவங்கள் சிறப்பாக உள்ளன. தொடர்ந்து வெளி வரட்டும் இந்தப் பகுதி.
- நெ.வெங்கடேசன், கடலூர்..
விஜயா டீச்சரை என் தங்கையாகவே ஏற்றுக்கொண்டேன். ஒரு அண்ணன் என்ற முறையில் நல்ல வரன் பார்த்து மாப்பிள்ளையின் கையில் ஒப்படைத்து, ‘என் கண்ணையே உன் கையில் ஒப்படைக்கிறேன். இனி அந்தக் கண்களில் ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்க வேண்டும்’ என சொல்லப் போகிறேன்.
- எஸ்.சண்முகசுந்தரம், வைத்தீஸ்வரன்கோவில்..