ஒரு படத்துல ஹீரோவுக்கு
அண்ணியாகுது அமலா பால். மகேஷ்பாபு அடுத்து நடிக்கிற தெலுங்குப் படத்துல
அவருக்கு அண்ணியாகிற அமலா, வெங்கடேஷுக்கு ஜோடியாகுது. தமிழ்ப் படத்துல அமலா
அண்ணியாகாதது நாம செஞ்ச புண்ணியம்...
த்ரிஷாவோட அடுத்த தமிழ்ப்படம் விஷாலோட ‘சமரன்’. ஊட்டி, சாலக்குடியில ஷூட் முடிஞ்சு தாய்லாந்து பறந்துடுச்சு த்ரிஷ். அடுத்த ஷெட்யூல் அங்கேதான்..!
கணித மேதை ராமானுஜன்
பற்றி இங்கிலீஷ்ல தயாராகிற படத்துக்கு முதல்ல சித்தார்த்தைப்
பேசியிருந்தாங்க. இப்ப அதுக்கு மாதவன் தேர்வாகியிருக்கார். மேடிக்கும்,
மேதைக்கும் முகச்சாயல் இருக்கத்தான் செய்யுது..!
கிருஷ்ணவம்சியோட ‘அபாயம்’ மூலமா
மீண்டும் வந்திருக்கு ஷெரீன். ‘‘எங்கேம்மா போனே..?’’ன்னு கேட்டா,
‘‘ஆஸ்திரேலியா போய் ஆயில் பெயின்டிங் கத்துக்கிட்டு வந்திருக்கேன்...’’னுது
பொண்ணு. ஓவியம் வரைஞ்ச ஓவியங்களை சீக்கிரமே கண்காட்சியில பாக்கலாம்..!
தனுஷை இந்தியத் தூதரா
ஆக்கினாலும் ஆக்கிடும் ‘கொலவெறி’. இந்தியா முழுதும் இதனால அறிமுகமான அவரை
அடுத்த ‘வந்தேமாதரம்’ கான்செப்ட்ல இணைக்க ஏ.ஆர்.ரஹ்மான் & பரத்பாலா
டீம் முடிவெடுத்திருக்காம். அதுலயும் இங்கிலீஷ் மிக்ஸ் பண்ணிடாதீங்க...
இன்னொரு பக்கம் மும்பைக்கும்,
சென்னைக்குமா டிராவல்ல இருக்கிற தனுஷ், அங்கே டைரக்ஷன் வேலைகளோட இன்னொரு
வேலைலயும் பிஸியா இருக்கார். அது ‘3’ படத்தை இந்தியிலயும் வெளியிடறது..!
கடந்த வருஷத்துல
அதிகப்படங்களுக்குப் பாடல் எழுதியிருக்கிறது நா.முத்துக் குமார்தான். 38
படங்களுக்கு பாடல் எழுதியிருக்க அவர், 98 பாடல்களை எழுதித்
தள்ளியிருக்கார். ரெண்டு கூடியிருந்தா செஞ்சுரி போட்டிருக்கலாம் கவிஞரே..!
‘உன்னதமானவன்’ல
மனநலம் பாதிக்கப்பட்டவரா வர்ற ஹீரோ பிரபா, கிழிஞ்ச சட்டை போட்டு தாடி
வளர்த்து அலங்கோலமா கோயில் வாசல்ல உட்கார, ஷூட்டிங்னு தெரியாம நிஜமாவே
அவருக்கு சிலர் பிச்சை போட்டிருக்காங்க. ‘பாத்திரமறிஞ்சு’ போட்ட
பிச்சைதான்..!
‘புலன் விசாரணை’, ‘செம்பருத்தி’ ஒளிப்பதிவாளர்
ரவி யாதவ் இந்திக்குப் போய் செட்டிலாகிட்டார். இவர் ஒளிப்பதிவில அபிஷேக்
பச்சன் நடிக்கும் ‘பிளேயர்ஸ்’ ரிலீசாகவிருக்க, தமிழ்ல டைரக்டராவும்,
தயாரிப்பாளராவும் ஆகிற முயற்சியில சென்னை வந்திருக்கார். வாங்க யாதவ்..!
சைலன்ஸ்கொஞ்ச காலமா ஹாலிவுட்
பட வேலைகள்ல மூழ்கியிருக்கிற ‘இசை’, இந்தியா வந்ததும் அவரோட இந்திப் பட
ஆடியோவை வெளியிட... அப்ப நடந்த பிரஸ்மீட்ல ‘டேம்’ பட இசைக்கு ஆஸ்கர்
கிடைக்க வாழ்த்து சொல்லி சிக்கல்ல சிக்கிட்டார். அது பெரிசாகிடாம இருக்க
அதுக்கான விளக்கத்தை எல்லா மீடியாவுக்கும் அனுப்பினார். தமிழ்நாட்டு
மேட்டரும் தெரிஞ்சுக்கங்க தங்கமே..!
அந்த நாலெழுத்து நடிகை
முன்னாலெல்லாம் கூட நடிக்கிற ஹீரோ பத்தியெல்லாம் கவலையில்லாம இருந்தது.
ஆனா சமீபத்துல ஒரு படத்துல மேற்படி ‘டேம்’ பட உயர நடிகரோட நடிக்கக்
கேட்டப்ப ‘நோ’ சொல்லியிருக்கு. ‘எங்கேயும் எப்போதும்’ எல்லாரும் ஒரே மாதிரி
இருக்க மாட்டாங்கன்னு நொந்துக்கிட்டிருக்காரு புரட்யூசர். நான் வளர்கிறேனே
மம்மி..!
கோலிவுட் கோயிந்து