தமிழ்ப் படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சக்கை போடு போடு கின்றன. சல்மான் கானில் ஆரம்பித்து டாப் நடிகர்கள் பலரும் தமிழ்ப்படங்களின் ரைட்ஸ் வாங்க ஆவலாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தமிழில் பாப்புலரான குத்துப்பாட்டு டியூன்களுக்கும் கடும் போட்டி.
‘கில்லி’யில் செம ஹிட்டான ‘அப்படிப் போடு...’ பாட்டின் டியூன் உரிமையை பிரபல வில்லன் நடிகர் சோனு சூத், தனது தயாரிப்பில் வெளிவரும் படத்துக்காக வாங்கி வைத்திருக்கிறார். அக்ஷய்குமாருக்கு அந்தப் பாட்டு பிடித்துப் போக, தனது ‘நாம் ஹாய் பாஸ்’ படத்தில் அதைப் பயன்படுத்த விரும்புகிறார். அக்ஷய் கேட்டால் சோனு சூத் கொடுத்து விடலாம். ஆனால் சல்மான் கானுக்கும் ‘அப்படிப் போடு’ பிடித்துவிட... அவரும் கேட்கிறாராம். தர்மசங்கடத்தில் தவிக்கிறார் வில்லன் சோனு!