நகைப்பெட்டியில் நச் லாபம்!



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly 
magazine

                      நகைப்பெட்டி இல்லாத வீடும் உண்டா? தங்கமோ, வைரமோ இல்லாவிட்டாலும், கவரிங் நகைகளைப் பத்திரப்படுத்தவும் நகைப்பெட்டியின் உபயோகம் தவிர்க்க முடியாது. நகை வாங்கும்போது கடைகளில் கொடுக்கிற ஒரே மாதிரியான பெட்டிகள் இன்று அவுட் ஆஃப் ஃபேஷன். விதம்விதமான மாடல்களில், வித்தியாசமான பொருட்களில் செய்யப்படுகிற நகைப்பெட்டிகளுக்கு மவுசு அதிகம்.

அழகழகான மாடல்களில் நகைப்பெட்டிகள் செய்வதில் நிபுணியான சென்னை ரேவதி கணேஷ், விருப்பமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘மர ஷீட்டுகள், அலங்கரிக்க கற்கள் மற்றும் லேஸ், பசை, வேஸ்ட் துணி, கொக்கிகள்... ஒரு மர ஷீட் 600 ரூபாய்க்கு வாங்கினா, அதுல 30 பெட்டிகள் வரை செய்யலாம். ஒரு பெட்டிக்கான மர ஷீட், மற்ற பொருள்கள் மற்றும் மர ஷீட்டை கார்பென்டர்கிட்ட கொடுத்து வெட்டி வாங்கற கட்டணம் உள்பட மொத்த முதலீடு 200 ரூபாய்.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?

‘‘வெல்வெட் துணில பண்றது, ஃபெல்ட் துணில பண்றது, பெயின்ட் மாடல், கல்லோ, கண்ணாடியோ ஒட்டி பண்றதுனு 15க்கும் அதிக மாடல்கள் பண்ணலாம். சதுரம், செவ்வகம், இதய வடிவம், பூ டிசைன், ஓவல்னு விரும்பின டிசைன்ல பண்ண முடியும். வெறுமனே ஒரு செட் தோடு வைக்கிற அளவுக்கு சின்ன சைஸ்லேருந்து, மொத்த நகைகளையும் வைக்கிற மல்ட்டி பர்ப்பஸ் பெட்டி வரைக்கும் எந்த அளவுல வேணாலும், எந்த பட்ஜெட்ல வேணாலும் பண்ண முடியும்ங்கிறதுதான் ஸ்பெஷல்.’’

ஒரு நாளைக்கு எத்தனை? விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘ஒரு பெட்டியை முழுக்க முடிக்க 2 மணி நேரமாகும். உதவிக்கு ஆளிருந்தா ஒரு நாளைக்கு 10&12 பெட்டிகள் வரைக்கும் பண்ணலாம். நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க, வீட்டுக்குப் பக்கத்துல உள்ள சின்ன ஃபேன்சி கடைகள், நகைக்கடைகள்னு விற்பனையை சின்ன அளவுலேருந்து ஆரம்பிக்கலாம். ஒரு பெட்டிக்கான அடக்கவிலை 150 ரூபாய்னா, 100 ரூபாய் லாபம் வச்சு விற்கலாம்.’’

பயிற்சி?

‘‘ஒரே நாள் பயிற்சில ஒரு மாடலுக்கான பொருள்களோட சேர்த்து கட்டணம் 450 ரூபாய்.’’
  ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்