குறும்படங்களை சர்வதேச போட்டிகளுக்கு அனுப்புவது எப்படி? என்னென்ன தகுதிகள் வேண்டும்?கவிபாரதி, திருநெல்வேலி.
பதில் சொல்கிறார் ‘tamilstudio.com’ அருண் கேன்ஸ்(பிரான்ஸ்), நார்வே, டொரொண்டோ (கனடா), லண்டன் ஆகிய ஃபிலிம் பெஸ்டிவல்களே சர்வதேச குறும்படப் போட்டிகளுக்கான முக்கிய களங்கள். சமீப காலமாக ஆஸ்திரேலியா, சிகாகோ திரைப்பட விழாக்களிலும் குறும்படப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் வென்றால் போக்குவரத்துச் செலவு உள்பட பல லட்சங்களை பரிசாக அள்ளலாம்!
இந்தியாவில் மும்பை ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவலும், இந்திய அரசின் தேசிய விருதுக்கான போட்டியும் முக்கியமானவை. இவை தொடர்பான தகவல்களும், போட்டிகள் குறித்த விபரங்களும் நாளிதழ்களிலும்,nfdcindia.com,tamizhstudio.com, tamilcinema.com போன்ற இணையதளங்களிலும் இடம்பெறும். ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனி விதிமுறைகள் உண்டு. பெரும்பாலும் குறும்படங்கள் 30 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பது பொதுவிதி. இந்த விதிமுறை வித்தியாசப்படலாம்.
படங்கள் நமது மண் சார்ந்தவையாக இருக்கவேண்டும். பழக்கவழக்கங்கள், கலைகள் உள்ளிட்ட அழுத்தமான செய்திகளை பதிவுசெய்யும்போது நடுவர்களை ஈர்த்து, குறைந்தபட்சம் திரையிடவாவது தேர்வு செய்யப் படலாம். அப்படி திரையிடப்பட்டாலே கணிசமான பணம் ராயல்டியாக கிடைக்கும்.
சில போட்டிகளுக்கு அமைப்பாளர்களே கருக்களை அறிவிப்பார்கள். அதற்கேற்ப படங்கள் எடுக்கப்பட வேண்டும்.
3சிசிடி, ஹேண்டி கேமராவால் எடுக்கப்படும் படங்களுக்கு அனுமதியில்லை. ஹைடெஃபனிஷன் கேமராக்களால்தான் எடுக்கப்பட வேண்டும். ஆங்கில சப்&டைட்டில் இருக்க வேண்டும். சொந்தமாக இசை கம்போஸ் செய்தி¢ருக்க வேண்டும். திரைப்படங்கள் அல்லது ஆல்பங்களில் இருந்து இசையை பயன்படுத்தியிருந்தால் அப்படம் நிராகரிக்கப்படும். படத்தை டிவிடியில் பதிவு செய்து கொரியரில் அனுப்ப வேண்டும். அதற்கான முகவரி அந்தந்த இணையதளங்களிலோ அல்லது மேற்கூறிய சினிமா தொடர்பான தளங்களிலோ கிடைக்கும்.
போட்டிகள் நடத்தும் இணைய தளங்களை கண்டறிவது சிரமமில்லை. கூகுள் சர்ச் என்ஜினில் அந்தந்த ஃபிலிம் பெஸ்டிவல் பெயரை டைப்செய்து சர்ச் செய்தால் நேரடியாக அந்த இணையதளங்களுக்குச் சென்றுவிடலாம். வாழ்த்துகள்!
வாஷிங் மெஷினிலிருந்து துர்நாற்றம் வருகிறது. குளிர்ந்த நீரில் துவைப்பதால் இப்படி ஆகுமா? அதை எப்படிச் சுத்திகரிப்பது?ஆர்.ராஜேஸ்வரி, மதுரை&21.
பதில் சொல்கின்றனர் ஐ.எஃப்.பி. சர்வீஸ் மையத்தினர்40 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்பநிலையில் துவைக்கும்போது, வாஷிங் மெஷினின் பல பகுதிகளில் க்ரீஸ் அல்லது கறுப்பு அழுக்கு போல மாசு படியும். இதுவே துர்நாற்றத்துக்குக் காரணம்.
அடிக்கடி இல்லாவிட்டாலும் எப்போதாவது ஒருமுறையாவது 60 டிகிரி வெப்பநிலைக்கு மேல் வைத்து துவைக்க வேண்டும். அப்போதுதான் பாக்டீரியா, கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய பூச்சிகள், விலங்குகளின் ரோமங்கள் ஆகியவை நீங்கும். இப்படி உயர் வெப்பநிலையில் மாதம் ஒருமுறையாவது துவைக்கும்போது வாஷிங் மெஷினும் சுத்தமாகிவிடும்.
டிடர்ஜென்ட் டிராயரையும், ரப்பர் ரிங்கையும் அவ்வப்போது சுத்தம் செய்வதன் மூலம் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.