சிரஞ்சீவியின் கம் பேக்!
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, நல்ல விமர்சனங்களுடன் வசூலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது, ‘மன சங்கர வர பிரசாத் காரு’ எனும் தெலுங்குப் படம். (பொங்கலை) சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியான படங்களில் இதுதான் டாப் என்கின்றனர். மட்டுமல்ல, இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு, இதுவொரு ‘மெகா கம் பேக்’ என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.
வெங்கடேஷ், நயன்தாரா உட்பட முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளனர். சில வருடங்களாக மனைவியையும், குழந்தைகளையும் பிரிந்து வாழ்கிறார் நாயகன். தனது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் வில்லன்களால் ஆபத்து வரும்போது, நாயகன் எப்படி தனது குடும்பத்தினரைக் காப்பாற்றி, மீண்டும் குடும்பத்தினருடன் இணைகிறார் என்பதே படத்தின் கதை.
இந்தக் கதையை எங்கேயும் சலிப்பு தட்டாமல், சுவாரஸ்யமாகத் தெலுங்கு மசாலாவைக் கலந்து கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கின்றனர். தற்போது டிரெண்டில் இருக்கும் ‘பகவந்த் கேசரி’யை இயக்கிய அனில் ரவிபுடிதான் சிரஞ்சீவியின் படத்தையும் இயக்கியிருக்கிறார்.
சில்லென்ற கோவையன்
|