Brain Storage
முறையான கல்வி பெறாமலேயே, பெரும் இலக்கிய மேதையாக உருவெடுத்தவர் ஷேக்ஸ்பியர். அவரது மனைவிக்கு அவரை விட எட்டு வயது அதிகம். அவர் பயன்படுத்திய சுமார் 1700 புதிய சொற்கள் ஆங்கில மொழியின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. அவரது நாடகங்கள் அரங்கேறிய The Globe Theatreன் ஒரு பங்குதாரராகவும், செல்வந்தராகவும் இருந்தார். அவரது மேடை நாடகங்களில், பெண் பாத்திரங்களை இளம் வயது சிறுவர்களே ஏற்று நடித்தனர்! உலகில் உள்ள மொத்த ஏரிகளில் சுமார் 60 சதவிகிதம் கனடா நாட்டில் மட்டுமே இருக்கின்றன. இருபது லட்சத்திற்கும் அதிகமான ஏரிகள்!
எகிப்திய பிரமிடுகள் (மொத்தம் சுமார் 138) உலகப் புகழ் பெற்றவை. ஆனால், எகிப்து நாட்டை விட அதிக பிரமிடுகள் சூடான் நாட்டில் இருக்கின்றன. சுமார் 200க்கும் அதிகமாக. ஆனால், சூடானிய பிரமிடுகள் செங்குத்தானவை, அகலம் குறைந்தவை. நைல் நதிக்கரையின் ஓரமாக இவை அமைந்திருக்கின்றன. Kushite kingdoms of Nubia வம்சாவளி மன்னர்களால் கட்டப்பட்டவை இவை.
மனிதர்களின் இயல்பையும், செயல்களையும் உளவியல் ரீதியாகப் புரிந்துக்கொள்ள ‘I am OK, You’re OK’ என்ற நூல் மிகவும் உதவும். மனிதர்களின் அனைத்து உணர்வு, செயல் நிலைகளும் நான்கு நிலைப்பாடுகளில் இருப்பதாகவும், ஒவ்வொரு நிலைப்பாடும் தொடர்ந்து கொஞ்ச நேரத்திற்கோ அல்லது மாறி மாறியோ செயல்படுகின்றன என்று அதன் ஆசிரியர் கூறுகிறார்.
அந்த நான்கு நிலைகள் என்னவென்றால்: I am OK You are not OK / I am Not Ok You are Ok / I am not Ok You are Not Ok / I am Ok You are Ok ஆகியவை. இவற்றுள், கடைசி மட்டுமே பாசிடிவ் வைப் உருவாக்கவல்லது.
ராஜேஷ் சுப்ரமணியன்
|