Brain Storage
உலகில் உண்மையில் வாழ்ந்த, வரலாற்றில் இடம் பெற்ற பெண்ணின் பெயரில் விளங்கும் ஒரே சுதந்திர நாடு, Saint Lucia. Saint Lucy of Syracuse (AD 283-304) என்ற பெண்ணின் பெயரை அந்த சிறு நாட்டிற்கு இட்டனர் அங்கே குடியேறிய பிரெஞ்சு மாலுமிகள். அதேபோல், ஒரு பெண் கடவுளின் பெயரில் (Eriu) அமைந்த நாடு Ireland.
 உலகின் மிகவும் இளமையான மக்களைக் கொண்ட நாடு எது தெரியுமா? Nigerதான். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு அது. கடந்த சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, தொடர்ந்து அந்த நாட்டின் மக்கள் தொகையில் சுமார் ஐம்பது சதவிகிதம் மக்கள் பதினெட்டு வயதிற்கும் குறைவானவர்களாகவே இருந்து வருகிறார்கள்.
எவ்வளவு வெட்டினாலும் ரத்தம் வராது. உவர் நீர்தான் கொட்டும். யாருக்கு என்று கேட்கிறீர்களா? நட்சத்திர மீன்களுக்குத்தான். அவற்றின் உடலில் ரத்தம் இல்லை. கடல் நீர்தான் உடலில் ஓடும்; அந்த நீரின் மூலமாகவே உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனும் உணவுச் சத்துக்களும் விநியோகிக்கப்படும்.
தீண்டப் படாத நாடாக வட கொரியா இருந்தாலும், அந்த நாட்டிற்கென்று சில பெருமைகள் உண்டு. உலகின் மிகப் பெரிய விளையாட்டு மைதானம் அங்கேதான் இருக்கிறது. Pyongyang நகரில் அமைந்துள்ள Rungrado 1st of May Stadium, சுமார் ஒன்றேகால் முதல் ஒன்றரை லட்சம் மக்கள் வரை அமர்ந்து பார்க்கும் வகையில், 51 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. Magnolia எனும் பூவின் அமைப்பில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
ராஜேஷ் சுப்ரமணியன்
|