என்னை புரிஞ்சுக்கிட்ட நான் பெத்தது..!



‘‘அம்மா... என்னோட கெமிஸ்ட்ரி ரெகார்டுக்கு அட்டை போடணும். நாளைக்கு ஸ்கூல்ல சப்மிட் பண்ணணும்..!’’‘‘சரிடா...’’‘‘அப்படியே என் ஃப்ரெண்டோட ரெகார்டுக்கும் போட்டுரு. அவன் நோட்ட எனக்குக் கொடுத்து பாத்து எழுத ஹெல்ப் பண்ணான்ல..! அவன் நோட்டுக்கு ஃபர்ஸ்ட் அட்டை் போடும்மா..!’’

‘‘வாவ்... சர்ரா..! உனக்கு அவன் ஹெல்ப் பண்ணதுக்காக ஃபர்ஸ்ட் அவன் நோட்டுக்கு அட்டை போடச் சொல்றியா என் தங்கமே...’’ ‘‘ச்சே... ச்சே... அவ்ளோ எமோஷன்லாம் இல்ல..! முதல் நோட்டுக்கு கவர் போடுறப்ப எப்படியும் நீ சொதப்புவ..! அடுத்த நோட்டுக்கு அட்டை போடறப்ப முந்தைய தப்பெல்லாம் சரி பண்ணிட்டு பெர்ஃபக்ட்டா போடுவ..! அந்த கால்குலேஷன்லதான் ரெண்டாவதா என் நோட்டுக்கு கவர் போடச் சொன்னேன்..!’’

சங்கீதா வேல்முருகன்