Brain Storage



சுமார் 150 - 200 ஆண்டுகளுக்கு முன்னர், தங்கம் மற்றும் வெள்ளியை விட அலுமினியம்தான் மதிப்பு மிகுந்ததாக இருந்தது. ஃபிரான்ஸை ஆண்ட நெப்போலியன் - 3 மன்னன், தனது மிக சிறப்பான விருந்தினர்களுக்கு மட்டும் அலுமினியத்தால் செய்யப்பட்ட உணவு உண்பதற்கான உபகரணங்களை வழங்கவும், மற்ற விருந்தினர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியாலான உபகரணங்களையும் வழங்க உத்தரவிட்டான். 1886ம் ஆண்டுக்குப் பிறகே, அதன் தாதுவிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது சுலபமானதால், உற்பத்தி பெருகி, பொலிவிழந்தது.

111,111,111 x 111,111,111 = 12, 345, 678,987,654,321 . நீங்கள் கணக்கில் புலி என்றால் கொஞ்சம் சரி பாருங்க!

புலி வருது, புலி வருது எனச் சொல்றது சும்மா இல்ல. புலியின் உறுமல் சுமார் இரண்டு மைல் தொலைவுக்குக் கேட்குமாம். நீங்க சிங்கமா, புலியா?

1896ல், அப்போதைய  Zanzibar  நாட்டிற்கும், பிரிட்டிஷ் படையினருக்கும் நடந்த போரே உலகில் மிகவும் குறைந்த நேரம் நடந்த போர் ஆகும். சுமார் 38 நிமிடங்களே அது நீடித்தது. நாம் அதை விட நீண்ட நேரம் அக்கப்போர் புரிவது வேறு விஷயம்.

மனித உடலிலே வேகமாக வளரும் முடி, தாடிதான். வாழ்நாளில் தாடியை வெட்டாமலே இருந்தால், சுமார் 30 அடி நீளத்திற்கு வளருமாம்.

ராஜேஷ் சுப்ரமணியன்