தமிழ்ப் படம் 3



கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக்.தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், ‘தமிழ்ப் படம்’ என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ்.அமுதன் எழுதி இயக்கினார்.
மாபெரும் வெற்றி பெற்ற அந்தப் படம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் ரீமேக்  ஆனது. ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த திரைத்துறையின் ப்ளாக்பஸ்டர் படங்களை கலாய்த்திருந்தார்கள்.

அந்தவகையில் தெலுங்கில் இந்தியாவின் ஐகான் டைரக்டராக இருக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அனைத்துப் படங்களையும் துவைத்து காயப்போட்டார்கள்.
இதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொண்ட ராஜமவுலி, தனது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் அப்படத்தை புகழ்ந்திருந்தார்.

இப்படி தறிகெட்டு இந்திய திரையுலகை புரட்டி எடுத்த ‘தமிழ்ப் பட’த்தின் பார்ட் 2-வை அதே மிர்ச்சி சிவா - சி.எஸ்.அமுதன் கூட்டணி எடுத்தது. ஜெயலலிதா சமாதியில் அன்றைய தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தியானம் செய்த காட்சியை அப்படியே மிர்ச்சி சிவாவை வைத்து ஷூட் செய்தார்கள். இக்காட்சியையே போஸ்டராக வெளியிட்டு தமிழ்நாட்டை அதிர வைத்தார்கள். இன்றும் இந்தப் போஸ்டர் டிரெண்டிங்கில் இருக்கிறது.

ஆக, ‘தமிழ்ப் படம்’ என்ற பிராண்டுக்கு இப்பொழுதும் டிமாண்ட் உள்ளது. இதைப் பயன்படுத்தி மீண்டும் ஒரு கலாய்த்தலை நிகழ்த்த இந்தக் கூட்டணி தயாராவதாக செய்திகள் கசிகின்றன.
உண்மையோ பொய்யோ... ஒருவேளை ‘தமிழ்ப் படம் 3’ உருவானால் அப்படத்தின் போஸ்டர்கள் எப்படியிருக்கும்?சும்மா ஒரு ஜாலி கற்பனை.இது யார் மனதையும் புண்படுத்த அல்ல!

படங்கள்: tamilnadu now

காம்ஸ் பாப்பா