கார்த்திகை தீபத்துக்கு பட்டாசு!



-வாங்க சார் என்ன வேணும்..?
- பட்டாசு பா...
- தீபாவளி முடிஞ்சதும் கேட்கறீங்களே..?

- கார்த்திகை தீபம் வருதே பா... இப்பவே வாங்கிட்டா விலை குறைவா இருக்குமில்லையா?
- புத்திசாலி சார் நீங்க... சொல்லுங்க... என்ன பட்டாசு வேணும்..?

- பேப்பர் பாத்தேன். சவுண்டு 120 டெசிபலுக்கு மேலே இருக்கக் கூடாதுன்னு போட்டிருந்திச்சு. அதால சவுண்டு 120 டெசிபல்லுக்கு மேலே போகாத பட்டாசு இருந்தா கொடுங்க...
- சவுண்ட் டெசிபல் அளவெல்லாம் தெரியாது... சவுண்டு கம்மியான பட்டாசு வேணும்னா குருவி பட்டாசு வாங்கிக்குங்க...

- குட்... அதுல பத்து பாக்கெட் கொடு. அப்புறம் வெடிச்சபிறகு அதுல புகையெல்லாம் வராதுல்ல..?
- அதெப்படி சார் வராமப் போகும்? கொஞ்சமாவது வரத்தான் செய்யும்...
- அப்பன்னா அந்த பட்டாசு வேணாம்... வேற எதுனா கொடு...
- வேற... கம்பி மத்தாப்பு கொடுக்கவா..?

- கம்பிபிபி... மத்தாப்புபுபு... வேணாம்ப்பா. கொழந்தைங்க கைய சுட்டுக்கும்...
- தரைச் சக்கரம்..?
- நோ... நோ... அது திடீர்னு வெடிக்கும். ஒரு தீபாவளிக்கு அது என் கையில வெடிச்சிடுச்சி...
- பூச்சட்டி..?

- அது ஏர் பொல்யூசன்... அதுல நெறய புகை வரும். பொறுப்பான சிட்டிசன்ஸ் நாமே ஏர் பொல்யூசன் பண்ணக்கூடாது...
- அப்ப ராக்கெட் பட்டாசு..?
- சாரி... அது எதுனா குப்பை மேல விழுந்தா பத்திக்கும்...
- சார்... உங்களுக்கு எந்த மாதிரி பட்டாசு வேணும்? அத மொத சொல்லுங்க...
- அது நல்லா பறக்கணும்...

- ஓகே...
- ஆனா, சவுண்ட் இருக்கக் கூடாது...
- ஓகே...
- புகை வரக்கூடாது...
- ஓகே...

- வெடி மருந்து ஸ்மெல்லும் வரக்கூடாது...
- ஆக... நல்லா பறக்கணும், சவுண்டு வரக்கூடாது, புகை வரக்கூடாது... வெடி வாடை அடிக்கக் கூடாது... அதானே?
- ஆமாம்ப்பா... ஆமாம்...

- அந்த மாதிரி பட்டாசு எங்ககிட்ட இல்ல. வேணும்னா எதிர்த்தாப்ல இருக்கிற கடைல கேளுங்க. அங்க இருக்கும்...
- அது பட்டாசு கடை மாதிரி தெரியலையே... பாத்திரக்கடை மாதிரில தெரியுது..?

- ஆமா. அது பாத்திரக்கடைதான். இருந்தாலும் நீங்க கேக்குற பட்டாசு அங்க தாராளமா கிடைக்கும்...
- அப்படியா? அந்தப் பட்டாசை என்னன்னு கேக்குறது..?
- பூரிக்கட்டன்னு கேளுங்க..!

பொம்மையா முருகன்