புருஷன் வயிறு பித்து... மனைவி மனம் கல்லு!



-ஏம்மா... இன்னைக்கு ப்ரேக் பாஸ்ட்ல இட்லி தானே இருக்கணும்... இதென்ன பொங்கல்?
- மாவு தீந்து போச்சுங்க... அண்ணாச்சி கடைலயும் கேட்டுப் பாத்துட்டேன் அங்கேயும் இல்ல. வேற வழியில்லாமத்தான்...
- வேற வழியில்லனா தோணுனதை சமச்சிடுவியா..? காலங் காத்தால இந்தப் பொங்கலை எவன் திம்பான்..? ரெண்டு மணி நேரத்துக்கு மூளையே வேலை செய்யாது. மதமதன்னு இருக்கும். ச்சே...
- அதெல்லாம் மூளை இருக்கிறவங்க கவலைப்படணும்...

- என்ன... கிண்டலா? நா இங்க சீரியசா பேசிட்டு இருக்கேன்...
- சீரியசா..? அப்ப நானும் சீரியஸ்... என்னால இதைத்தான் செய்ய முடியும். முடிஞ்சா சாப்பிடுங்க... இல்லனா எங்கேயாவது போய் கொட்டிக்குங்க...
- அவ்ளோ தூரம் போயாச்சா... நானும் சாப்பிடல போடி...

- தட்ட தள்ளி விட்டுட்டு போறீங்கல்ல... போங்க. ஆனா, கையில காசு இல்லாம போறீங்க. ஹோட்டல்ல காசு கொடுத்தாதான் சோறு போடுவான்... 
- நான் ஒண்ணும் ஹோட்டலுக்குப் போகல. மன நிம்மதிக்காக பக்கத்திலிருக்கிற பிள்ளையார் கோயிலுக்கு போறேன். திரும்ப எப்ப வருவேன்னு தெரியாது. மீன் டைம் நீ என்னைப் பார்க்க விருப்பப்பட்டா அங்க வா...
- போங்க போங்க... நீங்க எப்ப திரும்ப வந்தாலும் நீங்க தள்ளிவிட்டுப் போனது உங்களுக்காக காத்திருக்கும்...
- கிராதகி....

- ம்ம்... உங்க மைண்ட் வாய்ஸ் கேட்டுடுச்சு...
-என்ன தம்பி கோயில் மண்டபத்திலேயே ரொம்ப நேரமா உக்காந்திருக்கீங்க...?
- ஒண்ணுமில்ல பூசாரி... மனசுல நிம்மதி இல்ல. கட்டுன பொண்டாட்டியே என்னை மதிக்க மாட்டேங்கிறா...
- இது எல்லா வீட்லயும் நடக்குறதுதானே தம்பி..

- ஆனா, இவ ரொம்ப ஓவரா பண்றா சாமி. பட்டு பட்டுன்னு எடுத்தெறிஞ்சி பேசிடறா...
- விடுங்க. குடும்பம்னா அப்படித்தான் இருக்கும்...
- முடியல சாமி. எல்லா டைமும் நானே விட்டுக் கொடுக்க வேண்டியதிருக்கு. காலைல கோபமா சாப்பிடாம கெளம்புறேன்... ‘போ... போ... திரும்ப இங்கதானே வரணும்’னு எகத்தாளமா பேசுறா சாமி...

- ஐயோ தம்பி... மணி 10 ஆச்சு. நீங்க இன்னுமா சாப்பிடல? கொஞ்சம் இருங்க தம்பி... பிரசாதம் நெறைய இருக்கு. கொண்டு வர்றேன்...
- சாமீமீமீ... அது என்ன பிரசாதம்..?
- பொங்கல் தம்பி...

பொம்மையா முருகன்