ம்க்கும்... ரொம்ப முக்கியம்!



* விசுவின் படங்களில் தவறாது இடம் பெறும் பெண் கேரக்டரின் பெயர் ‘உமா’.

* சுந்தர் சி தனது படங்களின் நாயகிகளுக்கு அதிகமாக சூட்டிய பெயர் ‘இந்து’.

* கவுதம் மேனன் அதிகமாக வைத்த பெயர் ‘மாயா’.

* அமிதாப் பச்சன் ஏற்று நடித்த பெரும்பாலான பாத்திரங்களின் பெயர் ‘விஜய்’.

* பழம்பெரும் நடிகரான கே.பாலாஜி, தான் தயாரித்த பெரும்பாலான படங்களில் ஹீரோ பெயர் ‘ராஜா’ என்றும் ஹீரோயின் பெயர் ‘ராதா’ என்றுமே சூட்டினார்.

* கிரேசி மோகன், தான் வசனம் எழுதிய படங்களில் ‘ஜானகி’, ‘மைதிலி’ ஆகிய இரு பெயர்களையும் தவறாமல் பாசிடிவ்வான பெண் கேரக்டர்களுக்கு வைப்பார். 

* பஞ்சு அருணாசலம், தான் திரைக்கதை வசனம் எழுதிய படங்களில் தவறாமல் முக்கியமான பெண் கேரக்டருக்கு ‘சுமதி’ என வைப்பார். l

காம்ஸ் பாப்பா