Alexa உடன் குடும்பம் நடத்துவது எப்படி?
கணவன்: டியர் அலெக்ஸா... எனக்கு இப்பவே கசமுசா செய்யணும்னு ஆசையா இருக்கு. உதவ முடியுமா?
 அலெக்ஸா: நிச்சயமா பிரதர். உங்க ரூம் லைட் வெளிச்சத்தை குறைக்கிறேன். ஏசியை 18ல வெக்கறேன். உங்க ஷெல்ப் வலது மூலையில வயாக்ரா இருக்கு. பக்கத்திலேயே ஜெல் இருக்கு.
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச மசாஜ் பொண்ணை வர சொல்லி இருக்கேன். இன்னும் 12 நிமிஷத்துல அவ உங்க பெட்ரூம்ல இருப்பா. அவளுக்கு நீங்க தர வேண்டிய பேமெண்ட் உங்க கிரெடிட் கார்டுலயிருந்து டெபிட் ஆயிடும்.
உங்க மனைவி எங்க இருக்காங்கன்னு ஜிபிஎஸ்ல செக் பண்ணேன். ரொம்ப தொலை தூரத்துல ஒரு பெரிய மால்ல ஷாப்பிங் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்களை பார்த்தா எப்படியும் 2 மணி நேரம் கழிச்சுதான் கிளம்புவாங்கனு தெரியுது.
அதுவரை நீங்க நல்லா என்ஜாய் பண்ணுங்க. உங்களுக்கான பாதுகாப்பு ரைட் சைடு டிராயர்ல இருக்கு. அலெக்ஸாவை பயன்படுத்தியதற்கு நன்றி!இதுதான் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பது என நீங்கள் வியந்தால் அது தவறு! ‘பாட்ஷா’ மாதிரி அலெக்ஸாவிற்கு இன்னொரு முகம் இருக்கு. இப்ப அதை பார்ப்போம். வாங்க...
மனைவி: டியர் அலெக்ஸா... என் புருஷனை கையும் களவுமா பிடிக்க நான் சொன்ன ஏற்பாடுகளை எல்லாம் பண்ணிட்டியா?
அலெக்ஸா: ஆமா மேடம். ரெண்டு மணி நேரம் கழிச்சிதான் நீங்க வீட்டுக்கு போவீங்கன்னு உங்க புருஷனை நம்ப வெச்சிட்டேன். ஆனா, நீங்க 45 நிமிசத்துல வீட்டுக்கு போயிடுவீங்க. வீட்ல 4 கேமரா வெச்சு அங்க நடக்கிறதை எல்லாம் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க உள்ள போக வேண்டியதுதான். உங்க கணவனை அந்தப் பொண்ணோட பிடிக்க வேண்டியதுதான் மேடம்.
உங்க விவாகரத்து பத்திரம்லாம் ரெடி பண்ணிட்டேன். உங்களுக்கு ஒன் டைம் செட்டில்மெண்ட்டா ரூ.50 கோடி ரூபாய் கேட்டிருக்கேன். மாசம் ஒரு லட்சம் வர்ற மாதிரி க்ளைம் செய்திருக்கேன். நான் செய்யவேண்டிய எல்லா வேலையும் முடிஞ்சுது. நீங்க புறப்பட வேண்டிய கார் வெளிய ரெடியா இருக்கு. ஆல் தி பெஸ்ட் மேடம்! இதுதான் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸின் இரண்டு பக்கமும்! கொசுறு தகவல்... அலெக்ஸா, ஒரு Female!
எஸ்.சந்தானம்
|