Brain Storage!



ரயிலிலோ, பேருந்திலோ கைக்குட்டை அல்லது துண்டு போட்டு இடம் பிடிப்பது நமது மரபிலே ஊறிய பழக்கமாகிவிட்டது. இது எப்போது ஆரம்பித்திருக்க வேண்டும் என்று யோசித்தால், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே, பெரியாழ்வார் தொடங்கி வைத்துவிட்டார். 
‘நாலாயிர திவ்ய பிரபந்த’த்தில் அவரது ஒரு வரி, ‘அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்...’ என்று வரும்.  ‘ரங்கா! இறக்கும் தருணத்தில் உன் நினைவு வருமோ வராதோ, இப்போதே உன் அருகில் எனக்கு இடம் வேண்டும்...’ என்று சொல்லி வைத்து விடுகிறார். நாமெல்லாம் எம்மாத்திரம்.

தங்கம் ஜொலிக்கிறது. அடுத்தது வெள்ளிதான் என்கின்றனர் நிபுணர்கள். வெள்ளிக்கு சுக்ர தசை ஆரம்பிக்கப் போகிறது. கொஞ்சம் முதலீடு செய்வதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

Elite shop ன்னு சொல்றாங்களே போய்ப் பார்ப்போம்ன்னு பார்த்தா, சாதாரண மக்கள்தான் அங்கேயும் வராங்க; Ordinary Shopல பார்த்தா, சொகுசு கார்ல Elite மக்கள் வராங்க. யாரு elite, யாரு ordinary? ஒண்ணுமே புரியல போங்க.

திருவள்ளுவரை நமக்குத் தெரியும். வள்ளுவக் குலத்தினர் என்று ஒரு பிரிவு மக்கள் இருப்பது பலருக்குத் தெரியாது. வள்ளுவக் குடியில் வந்தோர் பல்லவ மன்னர்களுக்கு அரசவை மத குருக்களாகவும் ஜோதிட ஆலோசகர்களாகவும் இருந்திருக்கின்றனர். வள்ளுவ ஜோதிடம் புகழ் பெற்றது. ஜோதிடத்தையும், நாடி சாஸ்திரத்தையும் தொடர்ந்து தமது பரம்பரைத் தொழிலாக இன்றும் பலர் பின்பற்றி வருகின்றனர்.

ராஜேஷ் சுப்ரமணியன்