ஹலோ...போதைப் பொருள் தடுப்பு ஆபீசா?
-சார்... நார்காட்டிக் ஆபீஸுங்களா..? - ஆமா... போதைப் பொருள் ஒழிப்பு அலுவலகம்தான்... உங்களுக்கு என்ன வேணும்..? - சார் இங்க ஒரு மளிகைக்கடைல பாக்கெட் பாக்கெட்டா போதை வஸ்துவ வச்சி விக்கிறாங்க சார்... - அது எப்படி உங்களுக்குத் தெரியும்..?
 - நானும் அத வாங்கி தின்னுட்டு அரை போதையில பாதி நாள் சுத்திட்டு இருந்தேன்னா பாத்துக்குங்களேன்... - இஸ் இட்..?
- ஆமா சார்... அதத் தின்னபிறகு ‘யாராவது வந்து நெஞ்சில ஏறி மிதிங்கடா’ன்னு இருந்துச்சி... - உங்க இந்த இன்பர்மேஷனுக்கு நன்றி. உடனே ஸ்பாட்டுக்கு கிளம்பி வர்றோம்... - சார்... அட்ரஸ் கேக்கலயே..?
- இது விஜிலென்ஸ் ஆபீஸ்... நீங்க போன்ல பேசும் போதே GPS டிரேஸ் பண்ணிட்டோம். பத்தே நிமிஷத்துல அங்கே இருப்போம்... - ஆஹ்ஹா... சார் இன்னொரு விண்ணப்பம்... - சொல்லுங்க... - அவங்க மொட்டையா கேட்டா இல்லன்னுதான் சொல்லுவாங்க... - வேற எப்படி கேக்கணும்..?
- ‘ரவா’ன்னு கேளுங்க... - வாட்..? - ‘ரவா’ சார்... உப்புமா செய்வோமே..!
பொம்மையா முருகன்
|