வள்ளுவரும் என் மனைவியும்!



-எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு...
அட அட மாமா... என்னமா ஃபீல் பண்ணி எழுதியிருக்காரு வள்ளுவரு...
- இதுக்கு என்ன மீனிங் மாப்ள..?

- எந்தவொரு வேலையையும் நல்லா யோசிச்சி செய்யணும். அத விட்டுட்டு யோசிக்காம வேலையை செஞ்சிட்டு அப்பாலிக்கா ஆயுசுக்கும் ஃபீல் ஆகக் கூடாதுனு சொல்லிருக்காரு மாமா...
- அது சரி மாப்ள... இந்தக் குறளுக்கு நீ ஏன் ஃபீல் ஆவுற..?
- அது மாமா... அன்றைக்கு ஒரு நாள்...
- ஃபிளாஷ்பேக்கா மாப்ள..?

- ஆமா மாமா... அன்றைக்கு ஒரு நாள் எனக்கு கல்யாணமான புதுசு. அவளுக்கு உடம்புக்கு முடியாம, ‘மாமா என்னால சமைக்க முடியாது. இன்னைக்கு ஹோட்டல்ல வாங்கிக்கலாம்’னு படுத்துட்டா... ஆனா, அவ சொன்னத கேக்காம, ‘நான் சாம்பார் பிரமாதமா வைப்பேன். சாப்ட்டு பாரு புள்ள’னு சாம்பார் வச்சிக் கொடுத்தேன்...
- அப்புறம் என்னாச்சி மாப்ள..?

- இது நடந்து 15 வருஷமாச்சு. இன்னைய வரைக்கும் நான்தான் மாமா சாம்பார் வைக்கிறேன்...
- ஹா ஹா... இதைத்தான் மாப்ள வள்ளுவர் ‘எண்ணித் துணிக...’
- போதும் மாமா... நீங்களும் வெந்த புண்ணுல வெந்நீர ஊத்தாதீங்க...

பொம்மையா முருகன்