முழங்கால் வலி... காரணம், தீர்வு, முன்னெச்சரிக்கை!



முழங்கால் என்பது மனித உடலில் மிகவும் முக்கியமான மூட்டு ஆகும். நடை, ஓட்டம், படிகள் ஏறுதல், அமர்ந்து எழுதல் போன்ற தினசரி செயல்களில் முழங்காலின் பங்கு மிக முக்கியம்.

ஆனால், வயது, காயங்கள், வாழ்வு முறை, உடல் எடை போன்ற காரணங்களால் முழங்கால் வலி இன்று பொதுவான பிரச்னையாக மாறியுள்ளது.
முழங்கால் மூட்டு மூன்று முக்கிய எலும்புகளால் உருவாகிறது:

* ஃபீமர் (Femur) - தொடை எலும்பு.
* டிபியா (Tibia) - கால் எலும்பு.
* படெல்லா (Patella) - முழங்கால் காப்பு.

இந்த மூன்று எலும்புகளும் கார்டிலேஜ் என்ற மென்மையான படலத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கும். மேலும், முழங்காலில் நான்கு முக்கிய லிகமெண்ட்ஸ் (ACL, PCL, MCL, LCL) இருக்கின்றன. மெனிஸ்கஸ், மூட்டு இடைவெளியை பாதுகாக்கிறது. தசைகள் (Quadriceps, Hamstrings) முழங்காலை நீட்ட, மடக்க உதவும்.முழங்கால் வலி ஏற்படும் காரணங்கள்:

1. வயது சார்ந்த மாற்றங்கள் - கார்டிலேஜ் குளை, எலும்பு அடர்த்தி குறைவு, ஸினோவியல் ஃப்ளூயிட் குறைவு.

2. காயங்கள்  ACL / MCL tear, மெனிஸ்கஸ் காயம், படெல்லா காயம்.

3. அழற்சி நோய்கள் - Osteoarthritis, Rheumatoid Arthritis, Gout.

4. உடல் எடை அதிகம் - முழங்காலில் அதிக அழுத்தம்.

5. வாழ்க் கை முறை- நீண்ட நேரம் அமர்தல், தவறான உடற்பயிற்சி, தவறான காலணிகள்.

6. மற்றவை - ஓட்ட விளையாட்டு, அதிக உயரமான ஹை ஹீல்ஸ் அணிவது, கர்ப்பகாலம்.

வயதுசார்ந்த மாற்றங்கள் மற்றும் ஆர்த்திரைடிஸ்

* Osteo arthritis - வயதால் கார்டிலேஜ் Kulai, வலி, stiffness.

* Rheumatoid Arthritis - நோய் எதிர்ப்பு அமைப்பு தவறாக செயல்பட்டு இரு முழங்கால்களிலும் வீக்கம்.

* Gout - யூரிக் அமிலம் அதிகரித்து திடீர் வலி.

வயது காரணமாக ஏற்படும் வலி, நடப்புத் திறனை பாதித்து, வாழ்க்கைத் தரத்தையும் குறைக்கிறது.

காயங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான வலி:

* ACL, Meniscus, MCL / LCL, Patella injury.

* அதிக விளையாட்டு, தவறான உபகரணங்கள், warm-up தவிர்த்தல், repetitive stress ஆகியவை காரணம்.

* தடுக்கும் வழிகள்: warm-up, பொருத்தமான காலணிகள், strength training, உடனடி மருத்துவ பரிசோதனை.

பெண்களுக்கு ஏற்படும் முழங்கால் வலி:

* ஹார்மோன் மாற்றம் - மெனோபாஸ், ஈஸ்ட்ரோஜன்.

* உடலமைப்பு - இடுப்பு அகலம் அதிகம், முழங்கால் அழுத்தம் அதிகம்.

* கர்ப்பம் மற்றும் பிரசவம் - எடை அதிகரித்து வலி நீடிக்கும்.

* வாழ்க்கை முறை - தாழ்ந்து அமர்தல், ஹை ஹீல்ஸ்.

* பரிந்துரைகள்: கால்சியம் & வைட்டமின் D, வாக்கிங், யோகா, எடை கட்டுப்பாடு, போன் டென்சிட்டி செக்.

உடல் எடை மற்றும் வாழ்க்கை முறையின் தாக்கம்:

* எடை அதிகம் - முழங்காலில் பல மடங்கு அழுத்தம்.

* தவறான வேலை / விட்டு விட்டு உடற்பயிற்சி செய்தல்.

* தீர்வு: எடை கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு, ஸ்ட்ரெஸ் குறைப்பு.

வீட்டு மருத்துவம் மற்றும் இயற்கை நிவாரணங்கள்:

* ஐஸ் & ஹீட் தெரபி - இதனால் வீக்கம், இறுக்கம் குறையும்.

* மூலிகைகள் - மஞ்சள், இஞ்சி, தேங்காய் எண்ணெய்.

* மசாஜ் - எண்ணெய் சேர்த்து வலி இருக்கும் பகுதியில் மென்மையாக மசாஜ்.

*ஸ்ட்ரெச்சிங் & லோ இம்பேக்ட் எக்சர்சைஸ் - நீச்சல், சைக்கிள், நடைப்பயிற்சி.

* வாழ்க்கை மாற்றங்கள் - அதிக நேரம் அமராதீர்கள், ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்த்து விடுங்கள்.

* போதுமான நீர் குடித்தல், ஆரோக்கிய உணவு

உடற்பயிற்சிகள்

* க்வாட் செட்ஸ், ஸ்ட்ரெய்ட் லெக் ரெய்ஸ், ஹீல் ஸ்லைட்ஸ். இவை தசைகளை வலுவாக்கும்.

* ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச் - நெகிழ்ச்சியடைய வைக்கும்.

* லோ-இம்பேக்ட் கார்டியோ - நடை, நீச்சல், சைக்கிள்.

* பேலன்ஸ் எக்சர்சைஸ் - நிலைத்தன்மை மேம்படுத்த இதை மேற்கொள்ளலாம்.

மருத்துவ சிகிச்சைகள்:

* மருந்துகள் - NSAIDs, Pain relievers, Corticosteroid, Hyaluronic Acid injection.

* பிசியோதெரபி - Stretching, Strengthening, Electrotherapy, Manual therapy.

* Support devices - Knee braces, Orthotic insoles.

* ஆரம்ப கட்டத்தில் மருத்துவரை அணுகி, பரிசோதனை மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

அறுவை சிகிச்சை

* Arthroscopy - Meniscus, cartilage repair.

* Partial Knee Replacement - பகுதி மூட்டு மாற்று.

*Total Knee Replacement - முழு முழங்கால் மாற்று.

முன்னெச்சரிக்கை முறைகள்:

* தினசரி நடைப்பயிற்சி, ஸ்ட்ரெச்சிங்.
* உடல் எடை கட்டுப்பாடு.
* பொருத்தமான காலணிகள்.
* ஹை ஹீல்ஸ் தவிர்ப்பது.
* எலும்பு டென்சிட்டி, வைட்டமின் D, கால்சியம் பராமரிப்பு
* மன அழுத்தம் குறைப்பு

முழங்கால் வலி சாதாரண பிரச்னை என்றாலும், ஆரம்ப கட்ட கவனம், வாழ்க்கை மாற்றங்கள், உடற்பயிற்சி, வீட்டு நிவாரணம், மருத்துவ ஆலோசனை ஆகியவற்றை பின்பற்றுவதால் நீண்டகால சிக்கல்களைத் தவிர்க்கலாம்.அறுவை சிகிச்சையை மருத்துவர்களே இறுதியாக வேறு வழியில்லாத சூழலில்தான் மேற்கொள்கிறார்கள்.l

 டாக்டர் த.ரவிக்குமார் 
(ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்)