இப்படியும் இருக்குமோ?!
‘குஷி’ படத்தின் போது இசையமைப்பாளர் தேவாவிடம் இயக்குநர் எஸ்.ஜே சூர்யா - ‘‘சார்... கில்மாவான பாட்டு ஒண்ணு வேணும்...’’ ‘‘போட்டுரலாம் தம்பி... என்ன மாதிரி சிச்சுவேஷன்..?’’
 ‘‘ஒரு காலேஜ் ஜூனியர் பொண்ணு... ரொம்ப செக்ஸியா இருப்பா... அவ ஹீரோவான சீனியர் பையன் கூட ஜல்சாவா ஆடுற மாதிரி ஹீரோயின் எடக்குமொடக்கா கற்பனை பண்ணிப் பார்க்கறா... இதான் சிச்சுவேஷன்...’’ ‘‘அட... நல்லாருக்கே தம்பி...’’ ‘‘ஆமா சார்... அந்த ஜூனியர் பொண்ணு வந்து... மும்தாஜ்...’’
‘‘யாரு..? நம்ம டி.ஆர்., சார் ‘மோனிஷா என் மோனாலிசா’வுல அறிமுகப்படுத்தினாரே... அந்தப் பொண்ணா..?’’ ‘‘அவளேதான்...’’‘‘ம்ம்ம்... பாட்டுக்கேத்த பொண்ணுதான்...’’ ‘‘ஹீரோ... நம்ம விஜய்..!’’‘‘அந்தத் தம்பி டான்ஸ்ல பின்னுவாப்லயே... அப்போ அவருக்கேத்த மாதிரி ‘பம்பாய் குட்டி சுக்கா ரொட்டி விட்டா பாரு செவத்த குட்டி...’, இல்லனா, ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா...’ இப்படி மெட்டுல போட்டுரலாம்... கிக்காவும் இருக்கும். டான்சும் இருக்கும்..!’’ ‘‘ஐயோ சார்... எனக்கு அந்த மாதிரிலாம் வேணாம்..!’’ ‘‘பின்ன..?’’
‘‘குஜால்லயே தெய்வீகமா மெட்டு இருக்கணும்...’’ ‘‘எப்படி..?’’ ‘‘இந்த ‘செந்தமிழ் தேன்மொழியாள்... நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்...’ மாதிரி...’’ ‘‘எதே..?’’ ‘‘ஆமா சார்... அதேதான்..!’’
‘‘யோவ்... அந்தப்பாட்டு ‘மாலையிட்ட மங்கை’ படத்துல டி.ஆர்.மஹாலிங்கம் ஹீரோயினை பார்த்து பாடுற காதல் பாட்டு யா..!’’ ‘‘அதேதான் சார்..! அந்தப்பாட்டு டி.ஆர்.மஹாலிங்கம் பாடுன பாட்டு. இந்தப்பாட்டு, நம்ம டி.ஆர்., சாரோட ஹீரோயின் ஆடுற பாட்டு. அதேமாதிரி இதுவும் வேணும்..!’’ ‘‘அடங்கோவ்வ்வ்..!’’ ‘‘ஹிஹிஹி...’’
‘‘மக்கள் ஒத்துக்குவாங்களா..?’’ ‘‘எல்லாம் ஒத்துக்குவாங்க சார்..!’’ ‘‘சரி போட்ருவோம்..!’’ தேவா செய்த தரமான சம்பவத்தில் இதுவொன்று. வரிகளை சேர்த்துப் பாருங்கள்... புரியும்.
செந்தமிழ் தேன் மொழியாள் (கட்டிபுடி கட்டிபுடிடா) நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா) நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா) காற்றினில் பிறந்தவளோ... புதிதாய் (கட்டில் வரை போட போறேன்டா- வழியே)
கற்பனை வடித்தவளோ... ஆ... ஆ... ஆ... ஆ... (கட்டிவிட்டு கட்டிப்புடிடா) ‘செந்தமிழ் தேன் மொழியாள்...’ மெட்டிலேயே வெளிவந்து சக்கைபோடு போட்டது ‘கட்டிபுடி கட்டிபுடிடா...’என்னவொன்று, அதில் ஹீரோ ஹீரோயின் தொட்டுக்கொள்ளவே மாட்டார்கள். இதில்... ம்ம்ம்...
ரைட்டர் சரித்ரா
|