இந்த ஆபாச வக்கிரத்துக்கு யார் பொறுப்பு..?



இந்தப் படத்தில் மறைத்திருக்கும் முகங்களும், பெயர்களும் நாம் அறிந்த சில நடிகைகள். 1990களில் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர்கள்.சமீபத்தில் இவர்கள் ஒரு சுற்றுலாத்தலத்தில் ஒன்று சேர்ந்தார்கள். பள்ளி, கல்லூரி ரீயூனியன் போல். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வலம் வந்தன.

அந்தப் படங்களில் ஒன்றை இந்த முகநூல் நபர் தனது தளத்தில் பதிவேற்றி ‘Granny and Milf’ என்று குறிப்பிட்டுள்ளார்.இதற்கு அர்த்தம் ‘Mom or Granny I like to f*ck’. இந்த வாக்கியத்தின் சுருக்கம்தான் அது. பொதுவெளியில் தனிப் பெண்களின் மீதான வன்முறைத் தாக்குதலே இது. இந்தப் பதிவரை 300 ஆயிரம் பேர் (300K) பின்தொடருகிறார்கள். ஒரு வன்புணர்வு நடக்கும் போது முதலில் இந்த ஃபாலோயர்கள்தான் பொங்குவார்கள். ‘சமூகம் சரியில்லை’ என்று. 

உண்மையில் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், வன்புணர்வுகள் என‌அனைத்துக்கும் இதுபோன்ற பதிவும் அதை ஆமோதித்து லைக் செய்பவர்களும், இப்படிப்பட்ட பதிவரை பின் தொடர்கிறவர்களுமே காரணம்.ஆம். இந்த மனநிலையே பெண்களுக்கு எதிரான வன்முறையின் தோற்றுவாய். 

அவரவர் வக்கிரங்களுக்குத் தேனூட்டி விட்டு வெளியே நல்லவனாக நடிப்பதால்தான் சமூகம் மாறவில்லை. எல்லா ஆண்களும் என்ற குற்றச்சாட்டையும் இந்த இடத்தில் இருந்தே வைக்க வேண்டியிருக்கிறது.முக்கியமான விஷயம், இப்படத்தை பதிவிட்டு அப்பதிவர் ‘CFNM’ என குறிப்பிட்டிருப்பது.

இது ‘Clothed Female and Nude Man’ என்பதன் சுருக்கம். சந்தேகமேயில்லாமல் இது வக்கிரத்தின் உச்சக் கட்டம். இப்படி எழுதப்பட்ட பதிவுக்குக் கீழ் இருக்கும் பின்னூட்டங்கள், பதிவைவிட மோசமானவை. ‘Dom’ என மறுமொழியில் குறிப்பிடுகிறார் ஒருவர். இது ‘Dominance’ என்பதன் சுருக்கம். அதேபோல் உறவில் பெண் ஆதிக்கம் செலுத்துவது ‘Femdom’.  
மறுமொழியில் இதைத்தான் அலசுகிறார்கள். இப்படத்தில் இருக்கும் பெண்களில் ‘அதில்’ யார் சிறந்தவர் என்ற விவாதம். 

பின்னூட்டங்களில் ‘Strapon’ எனப்படும் கலவி கருவி முதல் கொண்டு விவாதிக்கிறார்கள். இப்பதிவரும் சரி... பதிவுக்கு லைக் செய்தவர்களும் சரி... மறுமொழி எழுதியவர்களும் சரி... சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள். So called Cultured People.

பதற்றம் ஏற்படுகிறது. இவையெல்லாம் நாகரீக வளர்ச்சி அடைந்த சமூகத்தின் அவலநிலை அல்லவா? 

இவற்றையெல்லாம் எப்படி கண்டும் காணாமலும் செல்வது? இதுவே இப்பெண்களுக்கு இழைக்கும் பெரும் தீமை ஆகாதா? 

இது ஒரு படம்தான். இந்த நபர் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் பதிவுகள் முழுவதும் வக்கிரங்களும், தனிநபர் உரிமைகளின் மீதான அத்துமீறல்களுமாகவே நிறைந்து வழிகின்றன. 

மனம் கனக்கிறது. உறுதியாகச் சொல்லலாம். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இதுபோன்ற இடங்களில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. இந்த அவலத்தை முழுமையாக பக்கம் 100ல் விவாதிக்கலாம்...