வாங்க...கல்யாணத்துக்கு போகலாம்!



-என்னங்க... அடுத்த வாரம் என் சொந்தக்காரங்க கல்யாணம் வருது. பத்திரிகை வச்சிட்டுப் போயிருக்காங்க...
- சரி அந்தக் கல்யாணத்துக்கு நாம ரெண்டு பேரும் போகலாம்...
- அந்தக் கல்யாணத்துக்குப் போக எனக்கு ஒரு புது புடவை எடுக்கணும்...
- ஏன் இருக்கிற புடவையெல்லாம் என்ன ஆச்சு..?
- அங்க வர்றவங்களெல்லாம் புதுப் புடவை கட்டி மினிக்கிட்டு வருவாளுங்க. நான் மட்டும் பழச கட்டிட்டுப் போனா உங்க கெளரவம் என்னவாறது..?

- சரி புடவைதானே... வாங்கிடுவோம். அப்படியே சினிமாவுக்கு போகலாம். அப்புறம்..?
- அப்புறம்... மேட்சிங் ஜாக்கெட் வாங்கணும்...
- அப்புறம்..?
- அத தைக்கக் கொடுக்கணும்...

- அப்புறம்..?
- ஹாண்ட் பேக் ரொம்பப் பழசாயிடுச்சி... புதுசு வாங்கணும்...
- அவ்வளவுதானா..?
- இன்னும் இருக்கு. ஐ ப்ரோ பண்ணனும்... 
- அப்புறம்..?
- ஃபேசியல் பண்ணனும்...
- அப்புறம்..?
- இப்போதைக்கு அவ்வளவுதான்...

- அப்புறம் கல்யாணத்துக்கு கிஃப்ட்டு..?
- கிஃப்ட் வேணாம்... பணமா வச்சிடலாம்...
- வனஜா...
- என்ன..?
- இந்தக் கல்யாணத்துக்கு நான் மட்டும் போயிட்டு வர்றேன்...

- ஏன்..?
- நான் மட்டும் போனா போற வழில ஒரே ஒரு ‘மொய்க் கவர்’ மட்டும் வாங்குனா போதும்...

பொம்மையா முருகன்