slow ஆக சுற்றும் பூமி... காரணம் சீனா!
முந்தைய பக்கத்தில் ‘ஸ்பீடாக’ சுற்றும் பூமி குறித்து பார்த்தோம்.இதற்கு நேர் எதிரான தகவலை இப்பொழுது பார்க்கப் போகிறோம். யெஸ். பூமி ஸ்லோவாக சுற்றுகிறது.நாசாவின் சமீபத்திய ஆராய்ச்சி இதைக் கண்டறிந்துள்ளது.  உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டமான சீனாவின் மூன்று கோர்ஜஸ் அணை, பூமியின் சுழற்சியை ஒரு நாளைக்கு 0.06 மைக்ரோ விநாடிகள் குறைக்கிறதாம்.
மூன்று கோர்ஜஸ் அணையின் நீர்த்தேக்கம் 40 பில்லியன் கன மீட்டர் நீரைக் கொண்டுள்ளது. நீர் குவியும்போது, அது கிரகத்தின் மேற்பரப்பு முழுவதும் எடை விநியோகத்தை - அதன் சுழற்சி இயக்கவியலை மாற்றுகிறது.
யாங்சி நதியிலிருந்து 185 மீட்டர் உயரத்தில், 2 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்தில், மனித புத்திசாலித்தனத்திற்கு சான்றாக மூன்று கோர்ஜஸ் அணை 22,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
ஒருவகையில் மூன்று கோர்ஜஸ் அணை, மனித கண்டுபிடிப்புகளின் திறனை வெளிப்படுத்துவதை மறுப்பதற்கில்லை. நாள் ஒன்றுக்கு 0.06 மைக்ரோ விநாடிகள்தானே குறைகிறது என அலட்சியமாக இப்பொழுது இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு நாளாக குறையும் பூமியின் சுழற்சி எதிர்காலத்தில் மனிதகுலத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
என்.ஆனந்தி
|